Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

இனி WhatsApp வழியாக முதலீடும் செய்யலாம்..


இனி WhatsApp வழியாக முதலீடும் செய்யலாம்..!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




இரண்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும், கேம்ஸ் என்கிற ரிஜிஸ்ட்ரார் மற்றும் டிரான்ஸ்ஃபர் ஏஜெண்டும் சேர்ந்து வாட்ஸப் செயலி வழியாகவே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வழி செய்து இருக்கிறார்கள்.

 இந்தியாவில் சுமாராக 40 கோடி பேருக்கு மேல் வாட்ஸப் செயலியைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் மோதிலால் ஓஸ்வால் என்கிற இரண்டு நிறுவனங்கள் தான் தில்லாக இந்த திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

6384863848 என்கிற கேம்ஸ் நிறுவனத்தின் எண்ணுக்கு வாட்ஸப் வழியாக Hi என டைப் செய்து அனுப்பினால் போதும். அதன் பின் கேம்ஸ் நிறுவனத்தின் சேவைகள் அனைத்தும் தொடர்ந்து நமக்கு வாட்ஸப் வழியாகவே கிடைக்கும்.

அதே போல ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சேவைகளை வாட்ஸப் வழியாகப் பெற 88288 00033 என்கிற எண்ணுக்கு ஒரு ஹாய் மெஸேஜை வாட்ஸப் வழியாக அனுப்பினால் போதும்.

மோதிலால் ஓஸ்வாலுக்கு 93722 05812 என்கிற எண்ணுக்கு வாட்ஸப் வழியாக ஒரு ஹாய் போட்டால் போதும் அவர்கள் சேவைகளையும் பெறலாம். எனவே இனி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதிகம் சிரமப் பட வேண்டாம்.

கேம்ஸ், ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் அல்லது மோதிலால் ஓஸ்வால் மியூச்சுவல் ஃபண்ட்களின் எண்களுக்கு வாட்ஸப் வழியாக ஒரு ஹாய் போதும், நமக்கு தேவையான சேவைகளை அவர்களே தேடிப் பிடித்துக் கொடுப்பார்கள்.

 நீங்கள் ஒரு குறிப்பிட்ட திட்டத்தைப் பற்றிப் பேசுகிறீர்களா..? அதை பற்றிச் சொல்வார்கள். கே வொய் சி தொடர்பான விவரங்கள் வேண்டுமா, அதையும் விளக்குவார்கள். எஸ் ஐ பி வழியாக முதலீடு செய்ய வேண்டுமா, போட்ட பணத்தை வெளியே எடுக்க வேண்டுமா..? மூல தன ஆதாய வரி ஸ்டேட்மெண்ட் வேண்டுமா? நாம் முதலீடு செய்திருக்கும் ஃபண்ட்களின் என் ஏ வி வேண்டுமா..? எல்லாமே இந்த வாட்ஸப் எண்ணில் இருந்து நமக்குக் கிடைக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

 ஆக மகாஜனங்களே..! நம்மைத் தேடி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இன்னும் ஒரு சில படிகள் கீழே இறங்கி வந்து இருக்கிறார்கள். இனியாவது இந்த வாட்ஸப் சேவைகளைப் பயன்படுத்தி நல்ல ஃபண்டுகளை அவர்களிடமே விசாரித்து முதலீடு செய்யுங்களேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக