Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

ஜவ்வரிசி உப்புமா

 Image result for ஜவ்வரிசி உப்புமா
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


செரிமானப் பிரச்சனைகளை போக்கும் ஜவ்வரிசி உப்புமா

தேவையான பொருள்கள்:
ஜவ்வரிசி 100 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு கப்
வறுத்த வேர்க்கடலை ஒரு கப்
பச்சை மிளகாய் 1 
துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு 
பொட்டுக்கடலை 2 டீஸ்பூன்
கொத்தமல்லி சிறிதளவு 
நெய் ஒரு டீஸ்பூன்
எலுமிச்சம்பழம் அரை மூடி

செய்முறை:
ஜவ்வரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு வெங்காயம், பொட்டுக்கடலை, இஞ்சி, கேரட் துருவல், வேர்க்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, ஊறிய ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்ததும் நறுக்கிய கொத்துமல்லி எலுமிச்சம் பழச்சாறு கலந்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
இதோ இப்போது சுவையான ஜவ்வரிசி உப்புமா தயார்.

அரிசியுடன் ஜவ்வரிசியும் சேர்த்துச் சாப்பிட்டால், அது சூடான உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக