Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில்-கரூர்

Image result for அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோயில்-கரூர்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



அம்மன் என்றாலே பெண் தெய்வம் தான். அதனால் பெண்கள் அனைவரும் அம்மனுக்கு விரதம் இருந்து பல விதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர். ஆனால் கரூர் மாவட்டம் பெரிய திருமங்கலத்திலுள்ள அருங்கரை அம்மன் ஆண்களுக்கு மட்டுமே அருள் புரிகிறார்.

தல வரலாறு :
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த மீனவர்கள் அமராவதி ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்தனர். ஒருசமயம் ஒரு மீனவர் ஆற்றில் வலைவீசிய போது, அம்மன் சிலை உள்ள பெட்டி ஒன்று சிக்கியது. அம்பாள் தனக்கு அருள்புரிவதற்காகவே ஆற்றில் வந்ததாக கருதிய மீனவர்கள் ஆற்றங்கரையிலுள்ள மரத்தின் அடியில் பெட்டியை வைத்து வழிபாடு செய்து வந்தனர். காலப்போக்கில் அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுவிடவே, மணல் மூடி பெட்டி மண்ணுக்குள் புதைந்து விட்டது.

பெட்டி இருந்த இடத்தில் சிறிய மேடு மட்டும் இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு இப்பகுதியில் நல்லதாய் என்ற சிறுமி, மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பசு மட்டும் மரத்தின் அடியில் இருந்த மணல் மேட்டின் மீது பால் சொரிந்ததைக் கண்டு வியப்புற்று அருகில் சென்று பார்த்தபோது ஒரு மேடு இருந்தது. அதன் மீது அவள் அமர்ந்தாள். அதன்பின் எழவில்லை.


மாலையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பின. சிறுமியைக் காணாததால் ஊரில் இருந்த ஆண்கள் அவளைத்தேடி இங்கு வந்தபோது, சிறுமி மணல் திட்டில் அமர்ந்திருந்ததைக் கண்டனர். அங்கிருந்து வர மறுத்த சிறுமி அவர்களிடம், நான் இங்கேதான் இருக்க விரும்புகிறேன். என்னைக்கண்ட இந்த நாளில், இதே நேரத்தில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள். பின் அவர்கள் சிறுமியை அம்பாளாக எண்ணி உருவம் ஏதுமில்லாமல் வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் இங்கு கோவில் கட்டப்பட்டது.

தலச் சிறப்பு :

சிறுமியை தேடிய ஆண்கள் இப்பகுதிக்கு வந்தது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேளை என்பதால், இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோவில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது.

பெண்களுக்கு உள்ளே அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்று வழிபடலாம். பெண் குழந்தைகள் கூட கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது.

அம்பாளுக்கு பூஜை முடிந்தபின்பு, படைக்கப்பட்ட பூஜைப் பொருட்கள், மற்றும் நேர்த்திக்கடனாக செலுத்தும் வாழை, தானியங்கள் போன்றவற்றை கோவில் முன் மண்டபத்தில் இருந்து சூரை விடுகின்றனர். இதனை பெண்கள் தங்களது சேலைத்தலைப்பில் பிடித்துக் கொள்கின்றனர். அம்பாள் பிரசாத பொருட்களின் வடிவில் பெண்களுக்கு அருளுவதாக நம்பிக்கை.

பிராத்தனை :

இங்கு பிரார்த்தனை செய்யும் ஆண் மகன்கள் தங்கள் குடும்பங்கள் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும் வேண்டிக் கொள்கின்றனர். நேர்த்திக்கடனாக பக்தர்கள் அன்னதானம் தருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக