இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒருநாள்
சிற்பி ஒருவர் கடைத்தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில்
உள்ள ஒரு கடையில் கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். அதைப் பார்த்த உடனே
அவருக்கு ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
அதன்
பின் அந்தக் கடைக்காரரிடம் சென்று ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா
அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா? என்று கேட்டார். அதற்கு அவர் தாராளமாக
எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் இருப்பது எனக்கு இடையூறாக இருக்கிறது
என்று கூறினார்.
மேலும்,
கடைக்கு வருபவர்கள் எல்லாம் இதுமேல் கால் தடுக்கி விழுகின்றனர்! என்றார்
கடைக்காரர். பிறகு சிற்பி அந்தப் பாறாங்கல்லை உருட்டிக் கொண்டு அவருடைய
இருப்பிடத்திற்கு சென்றார். அன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள், அந்த பாறாங்கல்லை
நுட்பமாக செதுக்கி அற்புதமான கடவுள் சிலையாக உருவாக்கினார், அந்த சிற்பி.
அந்தச்
சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. அங்குள்ள மக்கள் அதனை போட்டி போட்டுக் கொண்டு
விலைக்குக் கேட்டார்கள். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும்
ஒருவர்.
இறுதியில்
அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார். அந்த
சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த
மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?.... என்று கேட்டார்.
அதற்கு
சிற்பி, வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன்.
தங்களுக்கு என்னை நினைவில்லையா? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாக கிடக்கிறது என்று
சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்.
அதைக்கேட்ட
கடைக்காரர் வியப்படைந்தார். பிறகு சிற்பி, ஆம், தங்கள் பார்வையில் இது தடைக்
கல்லாய்த் தெரிந்தது. ஆனால், என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும்
சிற்பக் கல்லாய்த் தெரிந்தது.
இந்த
கல்லில் வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கியதும், இதனுள் இருந்த கடவுளின் உருவம்
வெளிப்பட்டது! என்றார்.
நீதி :
இதுபோல்
நாமும் நம் வாழ்வில் தேவையற்றதை, அதாவது வீண் வார்த்தைகள், சண்டைகள், கோபங்கள் என
தேவையில்லாததை நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாகவும், ஒவ்வொருவரும் நம்மை
போற்றும் வகையிலும் வாழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக