இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கன்னியாகுமரியிலிருந்து 32கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 16கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய கடற்கரைதான் முட்டம்.
இயற்கை தந்த அற்புத படைப்பில் நாம் காண வேண்டிய பல இடங்களில் இக்கடற்கரையும் ஒன்று.
சிறப்புகள் :
முட்டம் கடற்கரை தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். இவ்வூரின் கடற்கரை இயற்கை எழில் மிகுந்தது.
பாறைகள் நிறைந்த கடற்கரையும், மேடு பள்ளமான நிலப்பரப்பும், வடமேற்கில் செம்மண் அகழிகளுமாக இதன் இயற்கை எழிலுக்கு அளவேயில்லை.
அழகிய கடற்கரையைக் கொண்டிருப்பதால் இவ்வூர் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இங்கு மீன்பிடித்தல் முதன்மைத் தொழிலாகும்.
பழமையான சகல புனிதர் கத்தோலிக்க ஆலயமும், பழமையான கலங்கரை விளக்கமும் இங்குள்ளன.
சின்ன முட்டத்தில் அமைந்துள்ள கடற்கரையில் துறைமுகம் ஒன்று உள்ளது. இங்கு கிடைக்கும் மீன்கள் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இவ்வூர் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு அழகான கடற்கரையும், கலங்கரை விளக்கமும் உண்டு. சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.
அலையின் வேகம் அதிகமாகவும், பெரிய பெரிய அலைகளாகவும் இங்கு காணப்படுகிறது. அலைகள் ஒவ்வொன்றும் ஆக்ரோஷமாக வருவதை பார்க்கும் போதே மனதில் பயம் ஏற்படும்.
கரையிலிருந்து கடற்கரையைப் பார்ப்பதற்கு, நிறைய சிமெண்ட் பெஞ்சுகள் அழகாக அமைக்கப்பட்டும், குடில்கள்போல அமைத்தும், அதில் வட்ட வடிவ பெஞ்சுகள் உள்ளதால் பீச் அழகாக காணப்படுகிறது.
அழகிய நிலப்பரப்பும், பாறைகள் நிறைந்தும் காணப்படும் இந்தக் கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மாலை நேரங்களில் குடும்பத்துடன் கடற்கரைக்கு வந்து மகிழலாம்.
எப்படி செல்வது?
கன்னியாகுமரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
விமானம் வழியாக :
தூத்துக்குடி விமான நிலையம்.
ரயில் வழியாக :
கன்னியாகுமரி ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கன்னியாகுமரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
கடற்கரை.
துறைமுகம்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
கன்னியாகுமரி கடற்கரை.
விவேகானந்தர் பாறை.
திருவள்ளுவர் சிலை.
திற்பரப்பு அருவி.
பத்மநாபபுரம் அரண்மனை.
வட்டக்கோட்டை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக