இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே, அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும், பிரமிக்க வைக்க கூடியதாகவும் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்படும். அதுபோல நம்மை அதிசயக்க வைக்கும் வில்வமரத்தில் காய்க்கும் சிவ லிங்க ஆலயத்தை பற்றிப் பார்ப்போம்.....!
இந்த அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திர வட்டத்தில் அமைந்துள்ள கடையத்தில் உள்ளது.
பொதுவாக சிவனுக்கு மிகவும் பிடித்தமான அர்ச்சனை பொருள் வில்வம். அந்த வில்வத்தின் பெயரையே சுவாமி இங்கு தனக்கு பெயராகச் சூடிக்கொண்டுள்ளார்.
மேலும் மகாகவி பாரதியார் இக்கோவில் முன்பு உள்ள தட்டப்பாறையில் அமர்ந்து தான் 'காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்" என்ற புகழ் பெற்ற பாடலை எழுதினார்.
தேவர்கள் வளர்த்த மரம் :
பிரம்மதேவருக்கு சிவபெருமான் ஒரு வில்வபழத்தைக் கொடுத்தார். அதை மூன்றாக உடைத்த பிரம்மா ஒன்றை கைலாய மலையிலும், இன்னொன்றை பாரதத்தின் நடுவிலுள்ள மேருமலையிலும், மற்றொன்றை தென்பொதிகை சாரலிலுள்ள துவாத சாந்தவனத்திலும் நட்டார். அந்த துவாதசாந்தவனப் பகுதியில் தான் வில்வவனநாதர் கோவில் உள்ளது. அதை தேவர்கள் நீர் பாய்ச்சி இந்த மரத்தை வளர்த்தனர்.
அதிசய லிங்கம் :
தற்போது கோவிலுக்குள் உள்ள வில்வமரத்தில் எப்போதாவது தான் காய் காய்க்கும். இதை எடுத்து உடைத்தால் உள்ளே சிவலிங்க பாணம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் சிலருக்கு இந்தக் காய் கிடைத்துள்ளது. அவர்கள் அதை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.
எந்நேரமும் வரமருளுபவள் :
இத்தலத்து அம்பாள் நித்யகல்யாணி மிகுந்த உக்கிர தேவதையாக கிழக்கு நோக்கிய சன்னதியில் காட்சி அளிக்கிறாள். அதிலும் இத்தலத்து அம்மன் நித்யகல்யாணி என்பதால் எந்நாளும் எந்நேரமும் வரமருளுபவளாகக் கருதப்படுகிறாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக