Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

மாமியார், மருமகள்

 Image result for மாமியார், மருமகள்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



களத்தூர் என்ற ஊரில் குயவன் ஒருவன் தன் மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரை கண்டால் பிடிக்காது. அதனால் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். தினமும் குயவனிடம் நச்சரித்துக் கொண்டிருந்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் உள்ள வேறு வீட்டில் குடியமர்த்தும் படி கூறினாள்.

இதுபோல் தினமும் அவள் கூறிக்கொண்டே இருப்பாள். ஆனால், அவற்றையெல்லாம் அவர் காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்தார். மனைவியும் விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் கூறினாள்.

திடீரென ஒருநாள் அவளின் நச்சரிப்புத் தாங்கமுடியாமல், குயவன் தன் தாயை இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினார். பிறகு அவன் மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, தினமும் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது மிகவும் அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தார். பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.

அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். அப்போது மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. அதனால் முதன் முதலில் தன் அம்மாவிற்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்து, அவன் அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினைத்து பெருமைப்பட்டாள்.

தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தாள். தனது மகனிடம், மகனே! நீ செய்த தட்டு மிகவும் அருமை. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது? என்று கேட்டாள்.

மகனும் குழந்தைத்தனமாக, அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன் என்றான்.

அதைக்கேட்டதும் குயவனின் மனைவி தான் செய்த தவறை புரிந்துகொண்டாள். பிறகு தான் செய்ததை நினைத்து மிகவும் வருந்தினாள். அதன் பிறகு மாமியாரைத் தன் வீட்டிற்கு வரவழைத்து மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!