Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோவில், கோவை

Image result for அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோவில், கோவை


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கோயமுத்தூர், பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் கிணத்துக்கடவு செக்போஸ்ட்க்கு மேற்கே 12 முஅ தொலைவில் வீரப்பகவுண்டனூர் என்ற கிராமத்தின் அருகே உள்ள முத்துமலையில் அழகும் அருளும் நிறைந்த முருகன் கோவில் அமைந்துள்ளது.

மூலவர் : முருகன்.

பழமை : 500 வருடங்களுக்கு முன்.

ஊர் : கிணத்துக்கடவு.

மாவட்டம் : கோயம்புத்தூர்.

தல வரலாறு :

முருகப்பெருமான் ஒருமுறை தன் மயில் வாகனத்தில் இவ்வுலகை வலம் வந்தார். அப்போது அவரது கிரீடத்திலிருந்து முத்து ஒன்று உதிர்ந்து கீழே விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காக கீழே இறங்கியவர் இம்மலையில் கால் பதித்ததால் இது முத்துமலை என்றாகி விட்டது.

ஒருமுறை இந்த ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, 'இந்த மலையில் மூன்று காரைச்செடிகள் வரிசையாக இருக்கும். அந்த இடத்தில் தான் சிலை வடிவில் இருக்கிறேன்," என்றார்.

இதனை அப்பெண் ஊர் மக்களிடம் தெரிவித்தும் அவர்கள் நம்பவில்லை. பின்பு, இதேபோல் தொடர்ந்து 3 கார்த்திகை தினத்திலும், பரணி நட்சத்திரத்திலும் அப்பெண்ணின் கனவில் தோன்றி முருகன் தொடர்ந்து கூற, அந்த பெண்ணே நேரடியாக இந்த மலைக்கு வந்து காரைச்செடிகள் இருப்பதைக்கண்டு பரவசமடைந்தார்.

இதன் பிறகு தான் ஊர் மக்களுக்கு நம்பிக்கை வர ஆரம்பித்தது. இதை தொடர்ந்து முருகனின் சக்திவேல் நடப்பட்டு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பூஜை செய்யப்பட்டது. அதன் பின் திருப்பணிக்குழு அமைத்து முன் மண்டபம் மற்றும் கர்ப்பக்கிரகம் கட்டி முடித்து சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தல சிறப்பு :

கோவிலின் அருகே உள்ள புற்றில் ஒரு விசேஷம் உள்ளது. இரவு நேரத்தில் இந்த புற்றில் இருந்து ஒரு ஒளிக்கீற்று கிளம்புவதைக் காண்பதாக பக்தர்கள் பரவசப்படுகிறார்கள்.

தைப்பூசத்திருநாளில் வேலுடன் நிற்கும் இந்த முருகனை தரிசித்தால் நமது வினைகள் எல்லாம் அகலும்.

அறுபடை வீடுகளில் ஐந்தில் குன்றில் இருக்கும் முருகப் பெருமான் இன்னும் பல மலைகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். கேரள எல்லையில், கோயம்புத்தூர் அருகே உள்ள முத்துக்கவுண்டனூர் முத்துமலையிலும் முருகன் அருள்பாலிக்கிறார்.

ஒருமுறை இந்த ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, 'இந்த மலையில் மூன்று காரைச்செடிகள் வரிசையாக இருக்கும். அந்த இடத்தில் தான் சிலை வடிவில் இருக்கிறேன்," என்றார்.

பிராத்தனை :

குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமண தடை நீங்கவும் பக்தர்கள் முருகனை வழிபட்டு பலனடைகிறார்கள். நினைத்த காரியங்கள் நடக்கிறது என்றும், மனதிற்கு நிம்மதியும் தெம்பும் கிடைக்கிறது என்றும் பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, தங்களால் இயன்ற பொருளுதவி, அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக