Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

இன்ஸ்டாகிராம் ஒரு அறிமுகம்

அறிமுகமான ஒரு மணி நேரத்திலேயே நீக்கப்பட்ட அப்டேட்...! வேதனையில் இன்ஸ்டாகிராம்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

ஒரு நூற்றாண்டிற்கு மேல் புகைப்படத் துறையை ஆண்டுவந்த பல பெரிய நிறுவனங்கள் இன்று காணாமல் சென்றுவிட்டன. இப்பொழுது அந்த புகைப்படத்துறை மக்களின் கையில் ஒரு ஸ்மார்ட்போனாக சுருங்கி புது அவதாரம் எடுத்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் புகைப்படங்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதுதான் இன்ஸ்டாகிராம். இதன் வழியாக படங்கள் எடுக்கலாம். அதற்கு புதுவித வடிவமைப்புகளை உங்கள் செல்போன் வாயிலாகவே செய்யலாம். மேலும் இதுபோன்ற பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது.

இன்ஸ்டாகிராம், நாம் நம்முடைய செல்போனை பயன்படுத்தி எடுக்கும் புகைப்படத்தை பல்வேறு வண்ணம் மற்றும் வடிவத்தில் மாற்றித் தரும்.

நாம் எடுக்கும் படத்தை நம் விருப்பம் போல், நமக்கு எந்த வண்ணம், வடிவம் பிடிக்கிறதோ அந்த முறையில் நாம் படத்தை சேமித்துக் கொள்ளலாம். நாம் எடுத்து இருக்கும் சுமாரான படத்தைக்கூட இதன்மூலம் அழகாக்க முடியும்.

இன்று இன்ஸ்டாகிராம் எந்தளவுக்கு எல்லோரையும் வியக்க வைத்து கொண்டு இருக்கிறது என்றால் டிவிட்டர், ஸ்னாப்சாட் போன்ற செயலிகளை ஓரங்கட்டி கொடி கட்டி பறக்கிறது.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது.

நவீன யுகத்தில் ஒரு தொழிலை நடத்துவது என்பது ஒவ்வொரு நாளும் மிக சவாலான விஷயமே. ஒவ்வொரு நாளும் ஒரு புது தொழில்நுட்பம் பிறந்துக்கொண்டே இருக்கிறது.

நம் தொழிலில் நடக்கும் புதிய நுட்பங்களை தேடித் தேடி கற்று நம்மை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் சிறியவர்கள் கூட முந்தி, சென்றுகொண்டே இருப்பார்கள். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கெவின் சிஸ்ட்ரோம்.

கெவின் சிஸ்ட்ரோம் :

கெவின் சிஸ்ட்ரோம் 1983ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி டயேன், டக்ளஸ் சிஸ்ட்ரோம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவரது தாய் Zipcar கம்பெனியில் மார்கெட்டிங் எக்ஸிகியூடிவ் ஆக பணியாற்றினார். இவரது தந்தை TJX நிறுவனத்தின் மனித வள துணைத் தலைவராக பணியாற்றினார்.

கெவின் சிஸ்ட்ரோம், மிடில்செக்ஸ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கம்ப்யூட்டர் புரோகிராமிங் அறிமுகமாகியது. இதில் தன் ஆர்வத்தை வளர்த்து கொண்ட கெவின் சிஸ்ட்ரோம் தூம் 2 என்ற விளையாட்டில் சொந்தமாக நிலைகளை சிறுவயதிலேயே உருவாக்கினார். இவர் வளர வளர இதில் இருந்த ஆர்வமும் இவருக்கு அதிகரித்தது. இதனால் கம்ப்யூட்டர் கோடிங்கை முழுமையாக கற்று அவரது நண்பர்களின் AOL Messanger ஐ Hack  செய்யும் அளவிற்கு முன்னேறினார்.

டெக்னாலஜி உலகில் ஆரம்ப காலத்தில், இவர் தன் தாயின் மூலம் தன் திறமையை மேலும் வளர்த்துக் கொண்டார்.

இவர் உயர்நிலை பள்ளியில் படித்துக்கொண்டே போஸ்டன் நகரில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்தார்.

கெவின் சிஸ்ட்ரோம், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து 2006ஆம் ஆண்டில் மேலாண்மை அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். மேலும், இவர் ஸ்டான்ஃபோர்ட்டில் Sigma Nu fraternity-ல் உறுப்பினராக இருந்தார்.

இதை தொடர்ந்து ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது Mayfiled Fellows Program-க்கு தேர்ச்சி பெற்ற 12 நபர்களில் கெவின் சிஸ்ட்ரோமும் ஒருவர்.

கூகுளில் பணி :

2006ல் தொழில் பயிற்சி முடித்த கெவின் சிஸ்ட்ரோம், ஈவான் வில்லியம், ஜேக் டோர்சி, பிஸ்டோன் ஆகியோர் இணைந்து 'டிவிட்டர்" இணையதளத்தை துவக்கினர். அதன்பின்  கூகுளில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு மூன்று வருடங்கள் பணிபுரிந்தார்.

இவர் ஜிமெயில், காலண்டர், டாக்ஸ் போன்ற கூகுள் சேவைப்பிரிவுகளில் பணியாற்றினார். நல்ல வேலை, வருமானத்திற்கும் குறைவில்லை. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், கெவின் சிஸ்ட்ரோமின் மனதிற்கு திருப்தி ஏற்படவில்லை. ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக, கூகுளை விட்டு வெளியேறினார்.

2009ஆம் ஆண்டில் நெக்ஸ்ட்ஸ்டாப் என்ற புதியதாக தொடங்கப்பட்ட நிறுவனத்தில் ஃப்ராஜெக்ட் மேனேஜராக பணியில் சேர்ந்தார். இந்த நிறுவனத்தில் வேலை செய்யும்போது புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும். அதில்தான் நமது எதிர்காலம் அடங்கியுள்ளது என்பதை உணர்ந்தார். கெவின் சிஸ்ட்ரோம், மீதம் இருக்கும் நேரத்தை புகைப்படம் எடுப்பதில் செலுத்தி வந்தார். அப்போது இவருக்கு திடீரென புதிய ஐடியா ஒன்று பிறந்தது.

 Foursquare & Flicker இரண்டும் கலந்த ஒரு Photo Sharing App- (Burbn)ஐ உருவாக்கினார். இந்த செயலியை உருவாக்கியதும் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு பார்டியில் Bailene Ventures  Andreessen horowitz என்ற நிறுவனங்களிடம் இந்த செயலியை அளித்தார். இந்த நிறுவனங்கள் இதை ஏற்று கொண்டு முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தனர். கெவின் சிஸ்ட்ரோமுக்கு மூன்று கோடி ரூபாய் ஆரம்ப முதலீடும் கிடைத்தது.

அதன்பின் நெக்ஸ்ட்ஸ்டாப் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கெவின் சிஸ்ட்ரோம், பர்ப்பின் என்ற பெயரில் தன் நண்பர் மைக் க்ரிக்கர் உடன் இணைந்து புதிய நிறுவனத்தை தொடங்கினார்.

 ஆப்பிள் ஐஓஎஸ்-ல் இயங்கும் வண்ணம் பர்ப்பின் செயலியை உருவாக்கி வெளியிட்டனர். அதிகம் பேரை இந்த செயலி கவரும் என்று எதிர்பார்த்த கெவின் சிஸ்ட்ரோமுக்கு ஏமாற்றமே கிடைத்தது. எதிர்பார்த்த அளவிற்கு யாரும் இச்செயலியை பயன்படுத்த தொடங்கவில்லை.

 இதற்கு காரணம் என்ன? சிக்கல் எங்கே இருக்கிறது? என்று ஆராய்ந்தபோது, தாங்கள் வழங்கிய அதிகப்படியான வசதிகள்தான் பிரச்சனை என்பதை அறிந்துகொண்டனர். ஆரம்பத்தில் பயன்படுத்துவோருக்கு தேவையான வசதிகளைக் கொடுத்து, படிப்படியாக வசதிகளை சேர்த்திருந்தால் எளிதாக இருந்திருக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டனர்.

 இந்த சமயத்தில் கெவின் சிஸ்ட்ரோம் தன் தோழியுடன் மெக்சிகோவிற்கு பயணித்தபோது ஐபோனில் எடுக்கப்பட்ட படங்கள் சரியாக வரவில்லை. ஐபோன் கேமரா நன்றாக இருந்தாலும், படத்தை அழகாக்கும் ஃபில்டர் வசதிகள் இல்லாதது அவருக்குக் குறையாக இருந்தது.

 கேமரா செயலியில் ஃபில்டர் வசதிகள் இருந்திருந்தால் படத்தை அழகாக்கியிருக்கலாமே என்று அவர் தோழி கூறினார். இந்த எண்ணமே பர்ப்பின் செயலி புதிய வடிவில் உருவெடுத்தது. உடனடியாக தங்கள் செயலியில் இருந்த வசதிகளில் தேவை எது, தேவையில்லாதது எது? என்பதை ஆராய்ந்து வடிகட்டினர். இப்போது எளிமையாக, முற்றிலும் மாறுபட்ட செயலி ஒன்றை ஒரே மாதத்தில் உருவாக்கினர்.

இறுதியாக அக்டோபர் 6, 2010ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்தனர். இந்த செயலிக்கு 'இன்ஸ்டண்ட் கேமரா டெலிகிராம்" என்ற புதிய பெயரை சூட்டினர். பெரிய பெயராக இருக்கிறதென்று 'இன்ஸ்டாகிராம்" என்று சுருக்கப்பட்டது.

 அறிமுகம் செய்த 24 மணிநேரத்திலேயே இந்த செயலியை 25,000 பேர் உள்நுழைவு  செய்தனர்.

 கெவின் சிஸ்ட்ரோம் இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், மைக் க்ரிக்கர் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் இருந்து வந்தனர்.

 இன்ஸ்டாகிராம் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளமாக இருந்து வருகிறது. மொபைல் போனில் எடுக்கப்பட்ட படங்களை, டிஜிட்டல் முறையில் மெருகூட்டி சமூக வலைதளங்களில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதில் இலவச புகைப்பட பகிர்வுத் திட்டம் என்று ஒன்றுள்ளது.

 அதன் தனித்தன்மை புகைப்படங்களை சதுர வடிவமாகவோ, கோடாக் இன்ஸ்டாமெட்டிக், போலராய்டு படங்களைப் போன்று மொபைலில் எடுத்த படங்களை மாற்றி அனுப்ப முடியும். ஆரம்பத்தில் ஐபோன், ஐபாட் மற்றும் ஐடச்  போன்றவற்றின் பயன்பாட்டில் இன்ஸ்டாகிராமின் சேவையை ஆப்பிள் நிறுவனம் இணைத்துக் கொண்டது.

 2010ஆம் ஆண்டுக்கு பின் இன்ஸ்டாகிராமில் 17 லட்சத்து 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் மூலம் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்து 90 ஆயிரம் போட்டோக்கள் அப்லோட் செய்யப்பட்டன.

 ஆப்பிள் ஸ்டோரில் வெளியிடப்பட்ட ஒரே மாதத்தில் 1 மில்லியன் பயனரையும், தொடங்கிய முதல் ஆண்டில் 10 மில்லியன் பயனரையும் பெற்று மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது இன்ஸ்டாகிராம். இந்த செயலி ஆன்ட்ராய்டில் இரண்டு வருடங்கள் கழித்து 2012ஆம் ஆண்டில்தான் அறிமுகமானது.

 தொடங்கிய முதல் ஆண்டிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இன்ஸ்டாகிராம் செயலியை வாங்க பெரிய பெரிய நிறுவனங்கள் போட்டியிட்டன.

 ஒரே வருடத்தில் ஒரு கோடி பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கினர். இண்டஸ்டிரியில் பல முக்கியமானவர்களின் கண்ணை உறுத்தியது இந்த குட்டி டீம். இன்ஸ்டாகிராமின் இந்த வளர்ச்சியில் மேலும் இரண்டு நிறுவனங்கள் 70 லட்சம் டாலரை முதலீடு செய்தன.

இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் கையகப்படுத்துதல் :
இன்ஸ்டாகிராமை, ஃபேஸ்புக் வாங்கினால் இதன் சேவை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஏப்ரல் 12ல் 100 கோடி டாலர் கொடுத்து இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை 13 ஊழியர்களுடன் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிக் கொண்டது. இவற்றில் முப்பது சதவிகிதத்தை பணமாகவும், மீதியை ஃபேஸ்புக் பங்குகளாகவும் கொடுத்து வாங்கினார்;கள்.

பேஸ்புக் இன்ஸ்டாகிராமை வாங்கினாலும் அதை தன்னுடன் இணைக்காமல் தனியான ஒரு ஆப்பாகவே இன்றும் வைத்திருக்கிறது. ஏனென்றால் இன்ஸ்டாகிராமிற்கு என்று தனியான குணம் இருக்கிறது. அதைக் கெடுத்துவிடக் கூடாது என்று திட்டமிட்டார்கள். மேலும், அதன் லோகோ மற்றும் ஐகானை மட்டும் மாற்றினார்கள்.

செயலியின் வளர்ச்சிக்கான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை இவர்களிடமே விட்டுவைத்துள்ளது ஃபேஸ்புக்.

படங்களை மெருகூட்டுவது, பகிர்வது என்று தொடங்கிய இன்ஸ்டாகிராம் செயலி, படங்களுக்கு டேக் இடுதல், இருப்பிடம் பதித்தல், அரட்டை அடித்தல் எனப் பல வசதிகளையும் இணைத்து ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்றவற்றிற்கு இணையாக சமூக வலைத்தளங்;களில் முன்னணி வகிக்கிறது.

ஜனவரி 2011ல்  “Best Mobile App" என்ற ஆப் விருதைப் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமின் CEO-வான கெவின் “The 100 most creative people (Apple Inc) in Business in 2011" பட்டியலில் 66வது இடத்தைப் பெற்றார்.

கெவின் சிஸ்ட்ரோம்மை போர்ப்ஸ் பத்திரிகை பில்லியன் டாலர் பேபி என்று வர்ணித்துள்ளது. ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை ஆரம்பித்து இரண்டே வருடத்தில் ஒரு பில்லியன் டாலருக்கு விற்ற ஒரே தொழில்முனைவோர் இவர் மட்டுமே.

இன்ஸ்டாகிராமின் புதிய CEO :

இந்நிலையில் 24.09.2018 அன்று மாலை இன்ஸ்டாகிராம் நிறுவனர்கள் கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரிக்கர் இருவரும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதாக அறிக்கை வெளியிட்டனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அறிக்கையில் எங்களது நிறுவனத்தின் துணை தலைவராக உள்ள ஆடம் மொசேரி இன்ஸ்டாகிராமின் தலைவராக பொறுப்பேற்கிறார் என்று அறிவித்தது.

ஆடமின் தலைமைத்துவத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அவரது தலைமையின்கீழ் இன்ஸ்டாகிராம் வளர்ந்து, தொடர்ந்து முன்னேற்றம் அடையும் என இன்ஸ்டாகிராம் முன்னாள் துணை நிறுவனர்களான சிஸ்ட்ரோம் மற்றும் க்ரிக்கர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மாறிவரும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு காலத்துக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ளும் நிறுவனங்கள் மட்டுமே இன்று நிலைத்து நிற்கிறது.

கருவிகளின் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்திய நிறுவனங்களைவிட மக்களின் தேவையில் உள்ள தொழில்நுட்பத்தை கவனம் செலுத்திய நிறுவனங்கள் தான் காலத்தை வென்று வெற்றி அடைகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக