இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
விளையாடும்போது குழந்தைகளுக்கு உற்சாகம் கிடைக்கிறது. பலரோடு சேர்ந்து விளையாடுவதால் அவர்கள் பல்வகை திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்.
உண்மையில் குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதால் அவர்களுக்கு சோர்வு அதிகமாக வரும். விளையாட்டு தரும் உற்சாகத்தில் அவர்கள் அதனை மறந்து மற்றவர்களுடன் குதூகலமாக விளையாடுகிறார்கள் என்பது தான் உண்மை.
குழந்தைகளுக்கு சோர்வே இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் சுவராஸ்யமான விளையாட்டுகளில் ஒன்றான ராட்டினம் சுத்தலாம் வாங்க? விளையாட்டைப் பற்றி பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இரட்டைப்படை எண்ணிக்கையில் பல குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில் 'சாட் பூட் திரி" அல்லது 'பூவா? தலையா?" மூலம் ஒரு அணிக்கு இருவர் என்று பிரிந்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின் அணியாகச் சேர்ந்த இருவரும் விளையாடும் மைதானத்தில் ஒருவருக்கு ஒருவர் நேராக நின்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நின்ற பிறகு ஒருவரின் வலது, இடது கைகளை மற்றொருவரின் இடது, வலது கைகளோடு மாற்றி பெருக்கல் குறி போன்ற வடிவத்தில் கைகளைப் பின்னிக்கொள்ள வேண்டும்.
இருவரும் அவர்களின் காலை ஒட்டிச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு, இருவரும் பின்பக்கமாக சாய்ந்தபடி சுற்ற ஆரம்பிக்க வேண்டும்.
அவ்வாறு சுற்றும்போது கொஞ்சம் உற்சாகமூட்டும் வகையில் பாட்டுகளை பாடிக் கொண்டு சுற்றலாம்.
'சுத்துது சுத்துது ராட்டினம்..
போகுது பார் பட்டணம்..
சுட்டிப் பாப்பா ஏறிக்கோ..
குட்டித் தம்பி ஏறிக்கோ..
சுத்துது சுத்துது ராட்டினம்..
போகுது பார் பட்டணம்..
ஏறிக்கோ ஏறிக்கோ..
பார்த்து வரலாம் பட்டணம்.."
விளையாடும் எந்த அணி இவ்வாறு பாடிக்கொண்டே, அதிக நேரம் சுற்றுகிறதோ அந்த அணி வெற்றி பெற்றுவிடும்.
தொடர்ந்து சுத்தி கொண்டு இருப்பதால் தலைசுற்றல் ஏற்படும். அதனால் இடையில் பாஸ் என்று சொல்லி ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.
பின்பு சுற்றும் நபர்கள் அவர்களின் கைகளை இடது வலமாக மாற்றிக் கொண்டும், ஒரே திசையில் நிற்காமல் எதிர் திசையில் மாற்றி சுற்ற வேண்டும்.
இந்த விளையாட்டை போட்டியாக விளையாடாமல் தனித்தனியாக இருவர் சேர்ந்து சுற்றலாம்.
சோர்வே இல்லாமல் உற்சாகத்துடன் இந்த விளையாட்டை இதே மாதிரி தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக