இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அலைகளை பொதுவாக நாம் கடற்பகுதியில் காணலாம். அது கடலில் இருந்து எழும்பி வரும்போது நம் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும். அலைகள் பொதுவாக கடலில் ஏற்படும் காற்றின் வேகத்தினால் உருவாகின்றன.
நாம் எல்லோரும் கடலில் சென்று அலைகளோடு விளையாடுவது உண்டு. அப்படி விளையாடும்போது அலைகள் நம்மை உள் இழுத்து செல்வதுபோல் தோன்றும். இருந்தாலும் நாம் அலைகளோடு விளையாடுவது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும். அலைகள் எழுப்பும் ஒலிகளை கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
அலைகள் பொதுவாக கடலில் மட்டும்தான் ஏற்படும் என்று கேள்விப்பட்டுள்ளோம்? ஆனால் அலைப்பாறை என்று சொன்னால் நமக்கு புரியாத புதிராகவும், ஒரு ஆச்சரியமான விஷயமாகவும் இருக்கிறதல்லவா?
கடலில் அலைகள் தோன்றும் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்... ஆனால் பாறையே அலைபோல் காட்சியளிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?... ஆம்... பாறைகளே அலைபோல் இருக்கும் ஒரு ஆச்சரியத்தை பற்றிதான் இன்று தெரிந்துக் கொள்ளப் போகிறோம்.
இந்த அதிசயமான அலைப்பாறை எங்கு அமைந்துள்ளது?
அலைபோல் காட்சியளிக்கும் இந்த பாறை ஆஸ்திரேலியாவில் பேர்த் என்னுமிடத்தில் இயற்கையாக உருவான ஒரு அமைப்பு ஆகும். இந்த பாறை இயற்கையின் ஏராளமான விந்தைகளில் ஒன்றாக திகழ்கின்றன.
இந்தப்பாறை 15 மீட்டர் உயரம் உடையதாக இருக்கின்றன. பார்ப்பதற்கு கடலில் அலைகள் எவ்வாறு உருவாகிறதோ... அதே போன்று இப்பாறைகள் காட்சியளிக்கின்றன. இவற்றை 'ஹைடென் பாறை" என்றும் அழைப்பார்கள்.
இதன் அதிசயமான மர்மம் என்று சொன்னால் இந்தப்பாறையை நேரில் சென்று பார்த்தால் பொறியாளரால் வடிவமைக்கப்பட்டுள்ள அணை என்று கூறுவார்கள். ஆனால் இது இயற்கையாக அமைந்த ஒரு அலைப்பாறை ஆகும்.
அலைப்பாறையின் மேலடுக்கில் மழைக்காலத்தில் நீரை சேமித்து வைத்து அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நல்ல நீரை அளித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த அதிசயமான அலைப்பாறை சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக