Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

தமிழ் ராக்கர்ஸ் இணையதள முகவரியை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ் ராக்கர்ஸ் இணையதள முகவரியை முடக்க உயர்நீதிமன்றம்  உத்தரவு!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



அனுமதியின்றி சினிமா மற்றும் டி.வி. தொடர்களை வெளியீடும் தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி: புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதள முகவரிகளை முடக்க வேண்டும் என்று இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது. 

அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் டி.வி. தொடர்களை, ‘தமிழ் ராக்கர்ஸ்’, ‘லைம்டோரென்ட்ஸ்’ உள்ளிட்ட இணையதளங்கள் அனுமதியின்றி வெளியிடுவதாகவும், எனவே அந்த இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தாக்கல் செய்தமனுவில், தமிழ் ராக்கர்ஸ், இ.இசட்.டிவி., கேட்மூவிஸ், லைம்டொரன்ட்ஸ் போன்ற இணையதளங்கள், தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை வெளியிடுவதாகவும் இதனால் பெரும் இழப்பை சந்திப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார். பின்னர் தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு அவர் இடைக் கால உத்தரவு பிறப்பித்தார். மேலும் இவ்வாறு தயாரிப்பு நிறுவனங்களின் காப்புரிமையை மீறும் இணையதளங்களை இடைநீக்கம் செய்யுமாறு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கும் உத்தரவிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக