இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகள் விளையாட்டுகளை விளையாடும்போது அவர்கள் ரசனைக்கேற்பவும், உடல்நிலைக்கேற்பவும் அனைவருடனும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவார்கள்.
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் குழந்தைகள் விளையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அப்படி விளையாடும்போது அவர்களுடைய மனமும் உற்சாகம் பெறும்.
குழந்தைகள் சுற்றி இருக்கும் நண்பர்களோடு விளையாடும்போது நல்ல நெருக்கமும், மற்றவர்களைப் பற்றி புரிந்துக் கொள்ளும் மனப்பான்மையும் உண்டாகும்.
அவ்வாறு குழந்தைகள் எல்லோருடன் சேர்ந்து விளையாடும் குதூகலமான விளையாட்டுகளில் ஒன்று தான் ஓடு... உட்காரு...!
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த விளையாட்டை 20 குழந்தைகள் முதல் ஒன்றாகச் சேர்ந்து விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில் விளையாட்டில் கலந்துக்கொள்ளும் அனைத்து குழந்தைகளும் சம எண்ணிக்கையில் 4 அல்லது 5 குழுக்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, மைதானத்தில் ஒரு நேர்க்கோட்டை வரைந்துக் கொள்ள வேண்டும். எல்லா போட்டியாளர்களும் அந்த நேர்க்கோட்டின் முன்பாக அவர்களது குழுவுடன் ஒருவர் பின் ஒருவராக நின்றுக் கொள்ள வேண்டும்.
அதன்பின் நேர்க்கோட்டில் இருக்கும் ஒவ்வொரு குழுவும் அவர்களுக்கு எதிரே 30 அடி தொலைவில் சிறிய வட்டத்தை வரைந்துக் கொள்ள வேண்டும்.
'ரெடி" என்று சொன்னதும் ஒவ்வொரு குழுவில் உள்ள முதல் நபர் வேகமாக ஓடிச் சென்று எதிரே உள்ள வட்டத்தில் உட்கார்ந்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அவர் உட்கார்ந்த வேகத்திலேயே சட்டென எழுந்து, மறுபடியும் குழுவை நோக்கி வேகமாக ஓடி வர வேண்டும்.
அவ்வாறு ஓடி வரும் நபர் குழுவின் அருகே வந்ததும், வரிசையில் அடுத்ததாக நிற்கும் நபரைத் தொட்டுவிட்டு, வரிசையில் கடைசி ஆளாக போய் நின்றுக் கொள்ள வேண்டும்.
குழுவில் இருந்து முதலாவதாக ஓடிய நபர் யாரை தொட்டரோ, அவரும் வேகமாக ஓடிச் சென்று, வட்டத்தில் உட்கார்ந்து விட்டு பிறகு, உடனே எழுந்து ஓடி வர வேண்டும். இவரும் அதே மாதிரி வரிசையில் அடுத்து நிற்கும் நபரை தொட்டுவிட்டு, வரிசையில் கடைசியாக நின்றுக் கொள்ள வேண்டும்.
இதே மாதிரி குழுவில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் ஓடிச்சென்று, வட்டத்தில் உட்கார்ந்து விட்டு மீண்டும் ஓடி வர வேண்டும்.
இவ்வாறு விளையாடும்போது எந்தக் குழுவிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் வட்டத்தில் உட்காருந்து விட்டு, மீண்டும் வரிசையில் வந்து நிற்கிறார்களோ, அந்தக் குழு வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடிக்கும்.
பின்பு வரும் குழுக்கள் அனைவரும் அடுத்தடுத்த இடங்களைப் பிடிப்பார்கள். இந்த விளையாட்டை விளையாடும் போட்டியாளர்கள் வெற்றி பெறும் வரை சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக விளையாடுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக