இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கோவையில் அடர்ந்த வன பகுதிக்குள் குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் காணப்படும் கோவை குற்றாலம் அருவி தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் கோவை குற்றாலம் அருவி கோவையிலிருந்து ஏறத்தாழ 34கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
கோவை குற்றாலம் சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். அடர்ந்த வனப்பகுதியில், பறவைகளின் சப்தங்களும், மரங்களின் நிழல்களும் படர்ந்திருக்கும் அழகிய இடமாகத் திகழ்கிறது கோவை குற்றாலம்.
இவ்வருவி மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்கள் சுற்றுலா செல்ல ஏற்றதாக விளங்குகிறது.
உயரமான இடத்தில் இருந்து விழும் அருவி, அத்தனை அழகு. அதில் குளித்தால் இன்னும் ஆனந்தம். எப்போதும் பறவைச் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்ற அழகிய இடம்தான் கோவை குற்றாலம்.
இங்கே பலவகையான பறவைகளையும், விலங்குகளையும் ஒருங்கே காண முடியும். இப்பகுதியில் குரங்குகள் நிறைந்து காணப்படுகின்றன. அடர்ந்த காடுகளுக்குள் அற்புதமாக அமைந்திருக்கும் ஓர் அருவிதான் கோவை குற்றாலம். கரடுமுரடான பாறைகளுக்கு இடையில் பளிங்கு போன்ற நீர் ஓடி வருவது மிகவும் அழகு.
அருவியில் தங்குவதற்காக வனத்துறை சார்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள மர வீடுகள் மிகவும் பிரபலமானது. இரவு நேரங்களில் இங்கு தங்கி வனத்தின் சூழலை நம்மால் உணரும் வகையில் அமைத்துள்ளனர். வன விலங்குகளை நாம் வீட்டில் மேலே இருந்து ரசிக்கலாம்.
எப்படி செல்வது?
கோவையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
விமானம் வழியாக :
கோவை விமான நிலையம்.
ரயில் வழியாக :
கோவை ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அருவியில் தண்ணீர் இருக்கும் சமயத்தில் செல்வது சிறந்தது.
எங்கு தங்குவது?
கோவையில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
பரம்பிக்குளம்.
ஆழியாறு.
சோலையாறு.
பாலாறு.
ஆனமலை.
ஈஷா யோகா மையம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக