இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகள் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும்போது நல்ல நெருக்கமும், அவர்களுக்கிடையே புரிதல் தன்மையும் உண்டாகும்.
கல்விக்காக நேரத்தை ஒதுக்கும் குழந்தைகள் விளையாட்டிற்காக நேரத்தை ஒதுக்குவதில்லை என்பதுதான் உண்மை. எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேரமாவது நேரத்தை ஒதுக்கி எல்லோருடனும் சேர்ந்து விளையாடுங்கள்.
இன்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்றான ஆடும், முயலும் விளையாட்டை பற்றி பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
இந்த விளையாட்டை 20 முதல் 30 குழந்தைகள் வரை சேர்ந்து விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில் விளையாட்டில் பங்கேற்கும் எல்லாம் குழந்தைகளும் இரண்டு குழுக்களாக பிரிந்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் விளையாடும் மைதானத்தில் இரண்டு குழுவினரும் நேர்க்கோட்டு வரிசையில் நின்று கொள்ள வேண்டும். இந்த இரண்டு குழுவுக்கு நடுவில் 5 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
இரு குழுவினருக்கும் எதிரில் 50 அடி தொலைவில் ஒரு எல்லைக்கோடுகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்த பின் விளையாட்டை தொடங்கலாம்.
பின்பு முதல் குழுவின் வரிசையில் இருக்கும் முதல் நபர், இரண்டாவது குழுவில் வரிசையில் நிற்கும் முதல் நபரிடம் 'ஆடா.. முயலா..?" என்று கேட்க வேண்டும்.
அதற்கு அந்த நபர் ஆடு என்றால் சொன்னால் உங்களுக்கு எதிரே இருக்கும் எல்லைக்கோட்டை தொட வேண்டும்.
இவ்வாறு நீங்கள் எல்லைக்கோட்டை தொடச் செல்லும்போது பதில் கூறிய நபர் உங்களை வேகமாக துரத்தி வந்து தொட்டுவிட்டால் நீங்கள் அவுட் ஆகிவிடுவீர்கள். பின்பு நீங்கள் அவரது குழுவிற்கு செல்ல வேண்டும்.
அதே போல் ஆடு என்பதற்கு பதிலாக முயல் என்று சொல்லிவிட்டால், எல்லைக்கோட்டை முயல் போல் தாவித் தாவிச் சென்று தொட வேண்டும். பின்பு பதில் கூறிய நபர் உங்களை தாவி தாவி வேகமாக துரத்தி வருவார்.
இதே மாதிரி இரு குழுவில் உள்ள நபரும் ஒருவரை ஒருவர் மாற்றி கேள்விக் கேட்டு பதில் சொல்வதற்கு ஏற்ப எல்லைக்கோட்டை தொட வேண்டும்.
இந்த விளையாட்டை விளையாடும்போது இடையில் யாராவது அவுட் ஆகிவிட்டால் தொட்டவரின் குழுவுக்கு செல்ல வேண்டும்.
விளையாட்டின் இறுதியில் எந்த குழுவில் அதிகம் பேர் இருக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக