இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த வரகு சுண்டல்
தேவையான பொருள்கள்:
- வரகு அரிசி ஒரு கப்
- பச்சைப் பயறு இரண்டு கப்
- பெரிய வெங்காயம் இரண்டு
- பச்சை மிளகாய் நான்கு
- கடுகு தேவையான அளவு
- பெருங்காயம் தேவையான அளவு
- சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தேவையான அளவு
- கடலைப் பருப்பு தேவையான அளவு
- கறிவேப்பில்லை தேவையான அளவு
- காய்ந்த மிளகாய் தேவையான அளவு
- தேங்காய் அரை மூடி
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- வெங்காயம், பச்சை மிளகாய் ஆகிய இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- தேங்காயை துருவிக் கொள்ளவும்.
- பச்சைப் பயறையும், வரகு அரிசியையும் தனித்தனியாக வறுத்து வேகவைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய், கடுகு, பெருங்காயம், கடலைப் பருப்பு ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு தாளித்துக் கொட்டவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகிய இவற்றையும் எண்ணெய்யில் நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- இப்போது மேற்கண்டவையுடன் வரகு அரிசி மற்றும் பச்சைப் பயறை சேர்த்து நன்கு கிளறவும்.
- மேற்கண்டவையுடன் துருவிய தேங்காய் சேர்த்து உடன் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
- இதோ இப்போது சுவையான சுண்டல் தயார்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு வரகு சுண்டல் ஒரு வரப்பிரசாதம் குறைந்த கலோரியில் இது ஒரு சத்தான ஆகாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக