இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அரசு உதவி பெறும் கல்லூரிகளில்
ஆசிரியர் அல்லாத பணியிடங்களை வெளியாட்களுக்கு கொடுக்க அரசுக்கு உரிமையில்லை என
உயர் நீதிமன்றம் உத்தரவு!!
அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில்
தோட்டக்காரர், துப்புரவாளர் உள்ளிட்ட பணிகளை நிரப்ப அவுட்சோர்சிங் எனப்படும்
வெளியாட்களுக்கு ஒப்பந்தம் வழங்கும்படி உத்தரவிட அரசுக்கு உரிமையில்லை என்று
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் செயல்படும் அரசு உதவி பெறும்
தனியார் கல்லூரி தொடர்ந்த வழக்கில், தங்கள் கல்லூரியில் காலியாக உள்ள
தோட்டக்காரர், காவலர், துப்புரவாளர் உள்ளிட்ட நான்கு பணியிடங்களுக்கு ஆட்களை
நியமித்ததாகக் கூறியுள்ளது. நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கும்படி, கல்லூரி கல்வி
இயக்குநருக்கு விண்ணப்பித்ததாகவும், ஆனால் வெளியாட்களுக்கு ஒப்பந்தம் வழங்கும்படி
உத்தரவு பிறப்பித்து, தங்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி,
தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து உயர் கல்வித்
துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை
விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டீ.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசால்
அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கான பணிகளை வெளியாட்களுக்கு ஒப்பந்தம் வழங்கும்படி
உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உரிமையில்லை எனக் கூறி, தமிழக அரசின் மேல் முறையீட்டு
மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக