இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மத்திய பிரதேஷ் திண்டோரி மாவட்டத்தில் தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது... இந்த செய்தி..
10 ரூபாய் தரவில்லை: 14 வயது சகோதரரைக் கொன்ற இளைஞர்!
சமீப நாட்களாக நாட்டில் எதற்கெல்லாம் கொலை செய்யப்படுகிறார்கள்
என நாம் புலம்பத் தொடங்கிவிட்டோம். சும்மா நடந்த கொலைகள் எனச் சமீபத்தில், ஒரு தனியார்
நியூஸ் சேணலில் ஒரு செய்தி தொகுப்பு வெளியானது. குறிப்பிடப்பட்ட அந்த செய்தி தொகுப்பில்
நாட்டில் சமீபத்தில் காரணமில்லாமல் நடந்த கொலைகள் குறித்த முழு விவரங்களை அளிக்க நேரமில்லாமல்
போனது.
இளைஞர்கள் மத்தியில் சகிப்புத் தன்மை இல்லை, இதனாலே நாட்டில் நடக்கும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பெற்றோர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகரிப்பதாலே இன்று பலருக்கு அறம் என்பது ஏதுவென்றே தெரியாத சூழல் ஏற்பட்டுள்ளது என உளவியல் நிபுணர்கள் தங்கள் சார்பாகக் கருத்தை முன் வைக்கிறார்கள்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாகத் தனது 14 வயது சகோதரனை இளைஞர் கொன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேஷ் திண்டோரி மாவட்டத்தில் 14 வயதுடைய தனது மகன் கொலை செய்யப்பட்டதாக, உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து காவல்துறையினர், உயிரிழந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றினர்.
அப்போது, கொலை குறித்துப் பெற்றோர் கூறுகையில், ”எங்களுக்கு 2 மகன்கள். உயிரிழந்தவன் பெயர் ராகேஷ். அவனைக் கொலை செய்தது எங்கள் மூத்த மகன் தேவ் சிங்,” என காவல்துறையிடம் கூறியுள்ளனர். இதையடுத்து தேவ் சிங்கை(19) கைது செய்த காவல்துறையினர், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியபோது, இந்த கொலைக்கான காரணம் பெற்றோர் பிள்ளைகளிடம் காட்டிய பாகுபாடு என்பது தெரியவந்தது. கொலை நடப்பதுக்குமுன் பெற்றோர்கள் தங்கள் இளைய மகன் ராகேஷூக்கு மட்டும் ரூ. 10 சொந்த செலவுக்காகக் கொடுத்துள்ளனர். இதேபோல் பலமுறை, பாகுபாட்டுடனே அவர்கள் நடந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை வேலையில் ராகேஷ் ரூ. 10 ஐ பெற்றோரிடமிருந்து பெற்ற பிறகு, அவர் அண்ணன் தேவ் சிங், அந்த பணத்தை தன்னிடம் கொடுத்துவிடும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தேவ் சிங் தனக்கு ஏற்பட்ட கோபத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தனது தம்பியை அருகில் இருக்கும் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குப் பெரியக் கல் ஒன்றை எடுத்துக் கொடூரமாகத் தனது தம்பி ராகேசை தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த ராகேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்து விடுகிறார். உடனடியாக ராகேஷின் உடலை அங்கிருக்கும் ஒரு புதரிலே மறைத்து வைத்துவிட்டு தேவ் சிங் தப்பி விடுகிறார்.
ராகேசை காணவில்லை எனச் சனிக்கிழமை மாலை முதல் தேடி வந்த பெற்றோர், மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் அருகிலிருந்த தோட்டத்தில் சடலமாகக் கண்டெடுத்தனர். பின் காவல்துறைக்குத் தகவல் அளித்து தங்களது மற்றொரு மகனைப் போலீசிடம் ஒப்படைத்தனர். நாட்டில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர்கள் கல்வி கற்கும் இடங்களிலே முறையான வழிகாட்டுதல் வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக