Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 16 செப்டம்பர், 2019

ஆப்பிள் போன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்..

 

 

 

 

 

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 

இலங்கையில் தனது பெற்றோர் ஆப்பிள் ஃபோன் வாங்கி தர மறுத்ததால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட மகனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில்தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் பெயர் சசீபன். இவருக்கு வயது 24. இவருடைய தந்தை கடந்த பத்து வருடங்களாக கனடா நாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.

சமீபத்தில் கனடாவிலிருந்து வீடு திரும்பிய தந்தையிடம் சசீபன் ஐஃபோன் வாங்கிவரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் வாங்கி வராததால் ஏமாற்றம் அடைந்த சசீபன் பெற்றோருடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இதற்கிடையில் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் பலமுறை மிரட்டியும் இருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்பும் அதேபோல் போனை வாங்கி தரும்படி தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர் சமாதானம் ஆகாமல் இருந்துள்ளனர். அன்று இரவு சசீபன் தனது பெற்றோரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார். தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் மகனின் பார்வையிலிருந்து சற்று நேரம் தள்ளி இருந்தால் மகனின் வெறுப்பு குறையும் என நினைத்த பெற்றோர் பக்கத்து வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.

அன்று இரவு 9 மணி அளவில் மகனுக்கு உணவு பரிமாற சசீபனின் தாய் அவரது அறைக்குச் சென்றுள்ளார். ஆனால் சசீபன் கழுத்தை அறுத்துக்கொண்டு மயங்கிய நிலையிலிருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சசீபனின் தாய் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர், ஆனால் இந்த முறை அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல முறை தற்கொலை முயற்சி செய்துகொண்ட மகனை காப்பாற்றியுள்ள பெற்றோரால் இந்த முறை அதற்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது. போனிற்காக பெற்றோரைத் தவிக்க விட்டுச் சென்ற மகனின் செயல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக