இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இரண்டாவது
சுற்று விலைக் குறைப்பில் இறங்கி இருக்கிறது, இந்தியாவின் மிகப் பெரிய வாகன
உற்பத்தியாளரான மாருதி சுசூகி. நம் மாருதி சுசூகி நிறுவனம், இன்று தனது பிரபலமான
பலேனோ ஆர் எஸ் ரக கார்களின் விலையில் பெரிய குறைப்பைச் செய்து அதை முறையாக
அறிவித்துள்ளது. புதிய விலை குறைப்புக்குப் பின், பலேனோ ஆர் எஸ் ரக கார்களின் விலை
இப்போது சுமாராக 1 லட்சம் ரூபாய் வரை குறைந்து இருக்கிறதாம். இந்த விலை
குறைப்புக்கு முன் பலேனோ ஆர் எஸ் ரக கார்களின் விலை சுமார் 8.5 - 8.9 லட்சம்
ரூபாயாம். இப்போது இந்த 1 லட்சம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலை குறைப்பால் இனி 7.5 -
7.9 லட்சம் ரூபாய்க்கு இந்த கார்கள் விற்பனையாகும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
மாருதி சசூகி இந்தியா லிமிடெட்
நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கார் மாடல்களின் விலையை கடந்த செப்டம்பர்
25, 2019 அன்று 5,000 ரூபாய் வரை குறைத்தோம். மேலே சொன்ன விலை குறைப்புகளுடன்,
தற்போது பலேனோ ஆர் எஸ் ரக கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை 1,00,000 ரூபாய் வரை குறைத்து
இருக்கிறோம் என மாருதி சுசூகி நிறுவனமே மும்பை பங்குச் சந்தைக்கு எழுத்து மூலம்
தெரிவித்து இருக்கிறது.
முன்னதாக
கடந்த செப்ட்மபர் 25, 2019 புதன்கிழமை அன்று, இந்தியாவின் மிகப் பெரிய வாகன
உற்பத்தியாளரான மாருதி சுசூகி, தன் என்ட்ரி ரக கார்கள் மற்றும் டீசல் ரக கார்களின்
விலையை 5,000 ரூபாய் வரை குறைத்தார்கள். இந்த பட்டியலில் ஆல்டோ 800, ஆல்டோ கே 10,
ஸ்விஃப்ட் டீசல், செலிரியோ, பலேனோ டீசல், இக்னிஸ், டிசைர் டீசல், டூர் எஸ் டீசல்,
விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் போன்ற சிறப்பாக விற்பனையாகும் கார்கள்
உள்ளன.
நவராத்திரி
மற்றும் தீபாவளி பண்டிகை காலத்திற்கு முன்னதாகவே, மாருதி சுசூகியின் விலை
குறைப்பால், ஆட்டோமொபைல் சந்தையில், கார் வாடிக்கையாளர்களின் சென்டிமென்ட்
பாசிட்டிவ்வாக மாறும். அதனால் ஆட்டோமொபைல் துறையில் நுகர்வும் அதிகரிக்கும்
என்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள்.
மத்திய
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அனைத்து உள்நாட்டு நிறுவனங்களுக்கும்
கார்ப்பரேட் நிறுவன வரி விகிதங்களை 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக
குறைத்தார். மாருதி நிறுவனம் தனக்கு கிடைத்த வரிச் சலுகையை, அப்படியே மக்களுக்கு
கடத்தத் தொடங்கி இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக