Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! முழு விபரங்கள்.!


standard மற்றும் Pro


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் உடன் புத்தம புதிய ஒன்பிளஸ் டிவி Q1, Q1 ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் சற்று உயர்வான விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனங்களில் விலை உட்பட பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
standard மற்றும் Pro
ஒன்பிளஸ் டிவி Q1 சாதனம் பொதுவாக 55-இன்ச் 4கே கியூஎல்இடி ஸ்கிரீன் அமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3840 x 2160 பிக்சல் திர்மானம், 16:9 திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் ஒன்பிளஸ் டிவி Q1 ப்ரோ ஸ்மார்ட் டிவி ஆனது 55-இன்ச் கியூஎல்இடி ஸ்கிரீன் மற்றும் 100Hz refresh rate, local dimming zones ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் டிவிகள் ஆனது standard மற்றும் Pro என்கிற இரண்டு வேரியண்ட்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4கே ஆதரவு
இந்த ஸ்மார்ட் டிவிகள் 4கே ஆதரவுடன், 96 சதவிகித DCIP-3 மதிப்பெண்ணைக் கொண்டுள்ளது, கூடவே 120 சதவிகித NTSC மதிப்பெண்ணையும் கொண்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உலகில் எந்தவொரு ஸ்மார்ட் டிவியும் பெறாத உயர்ந்த மதிப்பெண்களை இந்த ஒன்பிளஸ் டிவி பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

டால்பி விஷன்
பின்பு அனைவரும் எதிர்பார்த்தபடி ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளில் Gamma Color Magic ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது, எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவிகளில் உள்ள அனைத்து உள்ளடங்ககங்களும் 60ஹெர்ட்ஸ் என்கிற Refresh Rate விகிதத்தில் இருக்கும்.
ஒன்பிளஸ் புதிய ஸ்மார் டிவிகளில் இடம்பெற்றுள்ள டால்பி விஷன் தொழில்நுட்பம் ஆனது டிவிக்கு 40 சதவீதம் அதிக பிரகாசத்தையும், வண்ண துல்லியத்தையும் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிவிகளில் இருக்கும் OTT உள்ளடக்கத்தில் அமேசான் ப்ரைம்,ஈரோஸ் நவ், ஜீ டிவி,நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பல்வேறு செயலிகள்
உள்ளன.

8ஸ்பீக்கர் மற்றும் 50வாட் சவுண்ட் அவுட்புட்
அனைவரும் எதிர்பார்த்தபடி 8ஸ்பீக்கர் மற்றும் 50வாட் சவுண்ட் அவுட்புட் கொண்ட sliding சவுண்ட்பார் ஆதரவுடன் வருகிறது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இதன் ஸ்பீக்கர்கள் ஃபார்வர்ட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்தைக் கொண்டுள்ளதால் அனைத்து ஒலிகளும் உங்களிடம் நேரடியாக வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆனது வெறும் 7 மிமீ தடிமனை மட்டுமே கொண்டுள்ளது மற்றும் இது 95.7 சதவிகிதம் ஸ்க்ரீன்-டூ-பாடி என்கிற விகிதத்தைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனங்களின் பின்புறம் ஒரு காந்த தகடு உள்ளது, அதை நகர்த்த டிவியில் உள்ள போர்ட்கள் வெளிப்படுகின்றன.

ஆண்ட்ராய்டு இயங்குதளம்
அறிமுகமான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது,பின்பு இந்த ஸ்மார்ட் டிவிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸமார்ட் டிவிகளின் யுஐ ஆனது ஆக்ஸிஜன் ப்ளே என்று அழைக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ரிமோட் ஆனது சில பொத்தான்களை மட்டுமே கொண்டுள்ளன, பின்பு இந்த ஸ்மார்ட் டிவிகளில் வாய்ஸ் எனேபிள் கூகுள் அசிஸ்டென்ட் in-built screen casting போன்ற வசதிகள் உள்ளன.

இணைப்பு ஆதரவுகள்
புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0இ மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், RJ45, ஈதர்நெட் மற்றும் இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

கிடுகிடுக்கும் விலை
ஒன்பிளஸ் டிவி Q1 55-இன்ச் மாடலின் உண்மை விலை ரூ.69,900-ஆக உள்ளது.
ஒன்பிளஸ் டிவி Q1 ப்ரோ 55-இன்ச் மாடலின் உண்மை விலை ரூ.99.900-ஆக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக