Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

மிதுன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020..!!



Image result for குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020..!!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


எதையும் மிகச் சரியாக செய்து முடிக்கும் மிதுன ராசி நேயர்களே...!

இதுவரை உங்கள் ராசிக்கு 6ஆம் இடமான ருண ரோக ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் இந்த குருப்பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான சப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். இதுவரை மனதாலும், உடலாலும் பல இன்னல்களையும், ஏமாற்றங்களையும் சந்தித்த நீங்கள் இதற்குமேல் குருபகவானின் அருட்கடாட்சம் பார்வையை முழுமையாக பெற போகிறீர்கள்.

திட்டமிட்ட காரியத்தில் எண்ணிய வெற்றிகள் கிடைக்கும். புதிய குடும்ப உறுப்பினர்களின் வருகையால் குதூகலமான சூழல் உண்டாகும். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உங்கள் முயற்சியை துரிதப்படுத்துவதன் மூலம் பணியில் விரும்பிய மாற்றம் உண்டாகும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள்.

வியாபாரிகளுக்கு :

தங்கம் மற்றும் நவரத்தினம் சார்ந்த வியாபாரிகளுக்கு முன்னேற்றமான காலம் இது. சுயதொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழலும், லாபமும் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் மேம்படும். தொலைத்தொடர்பு சார்ந்த துறைகளில் லாபம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு :

இதுவரை மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி கல்வியில் பல முன்னேற்றங்களை அடைவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் பல திருப்புமுனைகள் உண்டாகும். படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு கௌரவம் மற்றும் பாராட்டுக்கள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும்.

பெண்களுக்கு :

மனதில் நினைத்து பார்த்ததை விட மிகச் சிறப்பான திருமண வாழ்க்கை கைகூடும். இதுவரை கணவன்-மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சிறுதொழில் செய்து வரும் பெண்களுக்கு தொழிலில் எதிர்பாராத சில திருப்புமுனைகள் உண்டாகும். பெண்களுக்கு புத்திர அபிவிருத்தி ஏற்படும்.

விவசாயிகளுக்கு :

மஞ்சள், வாழையை பயிரிடுபவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும். மஞ்சளின் விலை சற்று அதிகரித்து காணப்படும். நீர்ப்பாசன நிலை தேவைக்கேற்ப காணப்படும். விவசாயம் சார்ந்த மற்ற துறைகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்குகொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு :

சமூகத்தொண்டு செய்பவர்களுக்கு இந்த காலம் உகந்தது. தாங்கள் செய்யும் அரசியல் செயலுக்கு ஏற்றவாறு தலைமை அதிகாரிகளிடம் நெருக்கமான சூழல் ஏற்படும். பொதுமக்களிடையே பிரபலம் அடைவீர்கள். உயர்பதவியில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சிகரமாக அமையும்.

கலைஞர்களுக்கு :

புதிய ஒப்பந்தங்கள் மூலம் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்தி மகிழ்வீர்கள். உங்களிடம் உள்ள மறைமுக திறமையை வெளிப்படுத்த சரியான காலம் இது. திறமைக்கேற்ற மதிப்பும், விருதும் தற்போது காத்திருக்கிறது. பொதுத்தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.

வழிபாடு :

வாரந்தோறும் சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு மாலையில் எள் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக