Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

எஸ்பிஐ -யில் இருக்கும் முத்தான இந்த 3 திட்டங்களும் உங்களுக்கு தான்!

Image result for எஸ்பிஐ

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இந்த மாற்றத்தின் வசதி மற்றும் சேவைகள் குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம்.


பொதுத்துறை வங்கியில் சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்கள் நலன் கருதி 3 முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மாற்றத்தின் வசதி மற்றும் சேவைகள் குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். அதே போல் தெரியாதவர்களுக்கு பகிர்வது அதை விட அவசியம்.

1. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று வங்கிச் சேவையை வழங்கும் நடைமுறையை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செய்துள்ளது.பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள 70 வயதுக்கு மேல் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று சேவையை வழங்கப்படும் என அந்த வங்கி தெரிவித்துள்ளது.

அதற்காக வங்கிச் பரிவத்தனைகளுக்கு 100 ரூபாய் கட்டணமும், வங்கிச் சாரா பரிவர்த்தனைகளுக்கு 60 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

2. sbi yono:
யோனோ கேஷ் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் – களில் கார்டு இல்லாமலே பணப்பவர்த்தனை செய்யலாம்.இந்தியாவிலேயே கார்டு இல்லா ஏடிஎம் பரிவர்த்தனை செய்யும் முதல் வங்கி என்ற பெயரை பெறுகிறது எஸ்பிஐ. இந்த வசதி இந்தியா முழுவதும் 16,500 ஏடிஎம்-களில் பயன்பாட்டிற்கு வருகிறது.

3. ரெப்போ வட்டி :
ரூ. 1 கோடி வரையிலான இருப்புக்கு 3.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புக்கு வட்டி வீதத்தை ரெப்போ வீதத்துடன் தொடர்புபடுத்துவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால், அதற்கான வட்டிவீதம் நிலையான சதவீதத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளது. (தற்போது இது 3.5 சதவீதமாக உள்ளது) ரெப்போ வட்டி வீதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக