Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

ஆங்கிலம் துணுக்குகள் 25 (Keep)


Image result for Keep 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



கடந்த பாடத்தில் நாம் Dating எனும் சொல்லுக்கான தமிழ் விளக்கம் பார்த்தோம். சாதாரணப் பயன்பாட்டில் என்றால் "திகதியிடல்" என்றும் காதல் மற்றும் உறவு நிலைகளின் போது "பொருத்தம் பார்த்தல்" மற்றும் "பொருத்தம் வழுப்படுத்தல்" போன்ற பொருள்களை தருவதாகவும் அறிந்தோம். இன்று பார்க்கப்போகும் சொல் "Keep" என்பதாகும்.

இந்த "Keep" எனும் ஆங்கிலச் சொல், பெயர் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Keep this chair here.
வை இந்த கதிரையை இங்கே
(இந்த கதிரையை இங்கே வை.)

I keep a mobile phone on the table.
நான் வைக்கிறேன் ஒரு அழைப்பேசியை மேசையின் மேல்.
(நான் ஒரு அழைப்பேசியை மேசையின் மேல் வைக்கிறேன்.)



I keep money in my purse.
நான் வைக்கிறேன் பணம் எனது பையினுள்.
(நான் எனது பையினுள் பணம் வைக்கிறேன்.)

I keep my credit cards here.
நான் வைக்கிறேன் எனது கடனட்டைகளை இங்கே.

I keep the octopus card on the reading machine.
நான் வைக்கிறேன் ஒக்டோப்பசு செலவட்டையை இயந்திர வாசிப்பான் மேல்.

How do you keep your weight under control?
எப்படி நீ உனது நிறையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறாய்?

If you like, keep it.
நீ விரும்பினால் வைத்துக்கொள் இதை.

You can keep it if you want.
உனக்கு வைத்துக்கொள்ள முடியும் உனக்கு வேண்டுமானால்.

மேலுள்ள வாக்கியங்களைப் பார்த்தீர்களா? அவற்றில் "Keep" எனும் சொல் "வை, வைக்கிறேன், வைத்துக்கொள், வைத்துக்கொள்ள, வைத்துக்கொள்கிறாய்" போன்றவாறே பயன்படுகின்றன. அதேவேளை இந்த "Keep" எனும் சொல் "தொடர்ந்து" எனும் வகையிலும் பயன்படும் இடங்கள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளவும்.

எடுத்துக்காட்டாக:

Keep coming.
தொடர்ந்து வா/வாருங்கள்.

How long will you keep going to school?
எவ்வளவு காலத்திற்கு தொடர்ந்து போவாய் பாடசாலைக்கு?

Sarmilan is going to keep going to school.
சர்மிலன் தொடர்ந்து போகப் போகின்றான் பாடசாலைக்கு.

இப்பொழுது விளங்குகிறதா? அதாவது "keep" எனும் சொல்லை அடுத்து வரும் வினைச்சொல் "ing" சொல்லமைப்பாக இருந்தால், "தொடர்ந்து" என பொருள்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

சரி! மீண்டும் அடுத்தப்பாடத்தில் சந்திப்போம்.

உங்களுக்கு தொடர்ந்து ஆங்கிலம் படிக்க வேண்டுமா?
Do you want to keep studying English? அப்படியானால் தொடர்ந்து இத்தளத்திற்கு வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக