Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 செப்டம்பர், 2019

மரங்களில் விளம்பரம் செய்தால் 3 ஆண்டு சிறை 25 ஆயிரம் அபராதம் - சென்னை மாநகராட்சி

Image result for மரங்களில் விளம்பரம் செய்தால் 3 ஆண்டு சிறை 25 ஆயிரம் அபராதம் - சென்னை மாநகராட்சி

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சென்னை சாலைகளில் உள்ள மரங்களில் தேவையற்ற பொருட்கள் மற்றும் விளம்பர பலகைகளை அமைப்பவர்களுக்கு அபராதத்தையும், சிறை தண்டனையையும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
   
தனியார் அமைப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் சாலைகளில் உள்ள மரங்களில் விளம்பர தட்டிகளை பொருத்தி வருகின்றன. இதனால் மரங்களில் ஆணி அடிப்பது மற்றும் கம்பிகள் கட்டுவதால் மரங்களின் ஆயுள் குறைந்து பட்டு போகிறது.
இந்த செயல்களை தவிர்க்க சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன் பிறகு மரங்களை துஷ்ப்பிரயோகம் செய்பவர்கள் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 வருட சிறை தண்டனையையும் ஏற்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இதுவரை விளம்பர பலகைகளை வைத்தவர்கள் இன்னும் பத்து நாட்களில் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் இதுபற்றி புகார்களை தெரிவிக்க 1913 என்ற இலவச எண்ணை அழைக்கலாம் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது. 24 மணி நேர சேவைக்கு இந்த இலவச எண் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும் என ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் மரம் வளர்ப்பை பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் அவ்வப்போது தன்ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மரம் நடும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இருக்கும் மரங்களை காக்க வேண்டியதும் முக்கியமாகிறது. சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கையினால் மரங்களை பற்றிய முக்கியத்துவம் பொதுமக்களுக்கு உணர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக