இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எர்மாட்டி ராஜா ராவ்(80)- மங்கம்மா(74) தம்பதிக்கு திருமணமாகி 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. இந்நிலையில் மூதாட்டி மங்கம்மா செயற்கை கருவூட்டல் முறையில் தனது 74-வது வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்!
ஆந்திர மாநிலத்தில், மூதாட்டி ஒருவர் தனது 74-வது வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த சம்பவம் பயங்கர ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியிலுள்ள நெலபார்ட்டிபாடு கிராமத்தைச் சேர்ந்த எர்மாட்டி ராஜா ராவ்(80)- மங்கம்மா(74) தம்பதிக்கு 1962-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை.
இதனால் தம்பதி இருவரும், செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தைப்பேறு பெற முயற்சி மேற்கொண்டனர். எனினும் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதற்கிடையே மூதாட்டி மங்கம்மாவுக்கு மாதவிடாய் நின்றது. இதனால் தங்களுக்கு இனி குழந்தைப் பாக்கியம் கிடைக்க போவதில்லை என தம்பதியினர் மன வருத்தத்தில் இருந்தனர்.
அந்த சமயத்தில் தான், குண்டூரில் உள்ள அகல்யா மருத்துவமனையில் 55 வயது பெண் ஒருவர் செயற்கை முறையில் குழந்தை பிரசவித்தது குறித்து மங்கம்மா அறிந்தார். மனம் தளராத மங்கம்மா தம்பதியினர் 2018-ம் ஆண்டு நவம்பரில் அகல்யா மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு மங்கம்மாவின் உடல் நிலையை ஆய்வு செய்த மருத்துவர்கள், குழந்தை பெற்றெடுப்பதற்கான முழு உடல் தகுதி பெற்றிருப்பதை உணர்ந்தனர்.
மங்கம்மாவுக்கு மாத விலக்கு முற்றிலுமாக நின்று பல ஆண்டுகள் ஆன நிலையில், செயற்கை முறையில் ஒரே மாதத்தில் மாத விலக்கை வர வரவழைத்துள்ளனர். பின்னர், ஐ.வி.எப் முறையில் கருத்தரிக்க வைத்தனர். தொடர்ந்து, கடந்த 9 மாதங்களாக மங்கம்மா மருத்துர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். 8வது மாதத்தில் மருத்துவமனையிலேயே அவருக்கு வளைகாப்பும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை, மங்கம்மா தனது 74-வது வயதில் சிசேரியன் முறையில் இரட்டை பெண் குழந்தைகளை நேற்று பெற்றெடுத்தார்.
இதுகுறித்து மருத்துவர் உமாசங்கர் கூறியது " மங்கம்மாவுக்கு அறுவை சிகிச்சை பிரச்னையின்றி நடந்தது. தாயும் சேயும் நலமுடன் உள்ளனர் ஆனால், வயோதிகம் காரணமாக அவரால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது. இதனால் தாய்ப்பால் வங்கியில் இருந்து பெறப்பட்டு குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது. தற்போது மங்கம்மா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக 2006-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் தனது 66-வது வயதில் குழந்தை பெற்றதே கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது. தற்போது 74-வது வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததன் மூலம் அதிக வயதில் குழந்தை பிரசவித்த பெண் என்ற கின்னஸ் சாதனையை மங்கம்மா நிகழ்த்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக