இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
முள்ளிவாய்க்கால்
என்னும் ஊரில் ஒரு முனிவர் இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக நான்கு பேர்
வந்தார்கள். அவர்கள் முனிவரிடம் உலகத்தை புரிஞ்சிக்கவே முடியலயே அதற்கு என்ன
வழின்னு கேட்டார்கள்? அதற்கு அந்த முனிவர் தெரியலப்பான்னு ஒரு வார்த்தையில் பதில்
கூறினார்.
ஆனாலும்,
முனிவரை விடாமல் வந்தவர்கள், என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத்
தெரியலைன்னு சொல்லுறீங்களே! என்று கேட்டார்கள். அதற்கு முனிவர் அவர்களிடம், சரி
இப்பொழுது நான் உங்களை ஒரு புஷ்பக விமானத்துல அழைத்துக் கொண்டு செல்கிறேன். அங்கு
போற வழியில் ஒரு காட்சியை உங்களுக்கு காட்டுகிறேன். நீங்கள் அதைப் பார்த்து விட்டு
உங்களின் கருத்தை சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் கருத்து தவறாக இருந்தால் அந்த
விமானம் உங்களை கீழே தள்ளிவிட்டு விடும் என்று கூறினார்.
முனிவர்
கூறியதை ஏற்றுக்கொண்டு அந்த நான்கு பேரும் முனிவரோடு சேர்ந்து புஷ்பக விமானத்தில்
ஏறிச் சென்றார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு அங்கு ஒரு இடத்தில் புலி ஒன்று தன்
குட்டிகளின் பசிக்கு இரை தேடி சென்றது. அதே இடத்தில் மானும் தன் குட்டிக்கு
தண்ணீர் தேடி வந்து கொண்டிருந்தது.
அங்கிருந்த
புலி மானைப் பார்த்ததும் திடீரென அதன் மேல் பாய்ந்து அதை கொன்று சாப்பிட்டு தன்
குட்டிக்கும் கொடுத்தது. அதை சாப்பிட்டதும் புலியின் குட்டிகளுக்கு மகிழ்ச்சியாக
இருந்தது. ஆனால், தன் தாயை இழந்த அந்த மான் குட்டிக்கு மிகவும் வருத்தமாக
இருந்தது.
முனிவர்
இந்தக் காட்சியை அவர்களுக்கு காட்டி, இதைப் பற்றி உங்களின் கருத்து என்னவென்று
கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு அந்த நான்கு பேரில் ஒருவர், இது ரொம்ப தவறான
செயல், மான் குட்டிக்கு இப்பொழுது தாய் இல்லாமல் போய்விட்டது என்று கூறினார். உடனே
அவரை அந்த விமானம் கீழே தள்ளிவிட்டது.
இன்னொருவரிடம்
முனிவர் ஏம்பா உன் கருத்து என்னன்னு? கேட்டார். ஏற்கனவே ஒருவர் கீழே விழுந்ததை
பார்த்த அவர், இல்லை இது சரிதான், ஏனென்றால் புலிகளுக்கு இரையாகத்தானே மான்கள்
உள்ளது என்று கூறினார். உடனே அவரையும் விமானம் கீழே தள்ளி விட்டது.
இதையெல்லாம்
பார்த்துக் கொண்டிருந்த மற்றொருவர் ரொம்ப உஷாராக, இது தவறும் இல்லை, சரியும் இல்லை
என்றார். உடனே விமானம் அவரையும் கீழே தள்ளிவிட்டது. கடைசியாக விமானத்தில்
இருந்தவரைப் பார்த்து முனிவர் ஏம்பா உன் கருத்து என்னன்னு கேட்டார். அதற்கு அவர்,
தெரியலயே சாமின்னு, சொன்னார். இந்த முறை விமானம் இவரை கீழே தள்ளி விடவில்லை.
அவர்கள் இருவரும் விமானத்தில் பயணம் செய்தனர்.
நீதி :
நமக்கு
தெரியாத விஷயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறது அனாவசியமானது. அதனால்,
தெரியாத விஷயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் சிறந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக