
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இயற்கை
சூழ்நிலையில் அமைந்த வேண்டும் வரம் அளிக்கும் அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன்
கோவில் விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி என்ற இடத்தில் உள்ளது.
மூலவர் : மாரியம்மன்
தீர்த்தங்கள் :வைப்பாறு, அர்ச்சுனா ஆறு
பழமை
: 500 ஆண்டுகளுக்கு முன்
தல வரலாறு :
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் மதுரை அருகிலுள்ள
சதுரகிரி மலையில் சித்தர் ஒருவர் அம்பாள் தரிசனம் வேண்டி தவமிருந்த போது அசரீரி
ஒன்று அவரை அர்ஜூனா நதி மற்றும் வைப்பாற்றுகிடையே உள்ள மேட்டுப்பகுதிக்கு வா..!
என்றது. பிறகு அவருக்கு அங்கே காட்சியளித்த அம்பாளை சிலையாக பிரதிஷ்டை செய்து
வழிபட்டார். சிறிது காலத்திற்கு பிறகு சிலை ஆற்றுமணலில் புதைந்து விட்டது.
ஒரு நாள் இந்தப்பகுதியில் சாணம் சேகரிப்பதற்காக
வந்த ஒரு சிறுமி, தற்போது அம்மன் இருக்கும் இடத்தில் தான் கொண்டுவந்த சாணக் கூடையை
வைத்தாள். மீண்டும் அந்தக்கூடையை அவளால் எடுக்க முடியாமல் பெரியவர்களை அழைத்து
வந்தாள். அப்போது அந்தச் சிறுமியின் மீது அம்பாள் அருள் வந்து, தனது திருமேனி சிலை
இங்கே புதைந்து கிடக்கின்றது, அதை எடுத்து இந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து
வழிபடுங்கள் என்று வாக்கருளினாள். அதன்படியே அங்கே கோவில் எழுப்பப்பட்டது.
தல அமைப்பு :
கருவறையின் நுழைவாசலின் உயரம் குறைவாக
இருக்கும். அம்பாள் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்டப்படி, பொன் ஆபரணங்கள்
அணிந்து தங்க மேனி உடையவளாக மின்னுகிறாள்.
பிரகாரத்தைச் சுற்றி
காத்தவராயன், பைரவன், வீரபத்திரர்,
பேச்சியம்மன், முப்பிடாரி அம்மன் ஆகிய சிறிய சன்னதிகள் இருக்கின்றன.
தலச் சிறப்பு :
இருதீர்த்தங்கள் :
இங்குள்ள அம்மன் வைப்பாறு, அர்ச்சுனா ஆறு என இரு
கங்கைக்கு நடுவே அமைந்து இருக்கிறாள். எனவே தான் மாரி, இருக்கங்(ன்) குடி மாரி
ஆனாள். இருகங்கையிலும் நீராடினால் முப்பெரும் பலன்களை பெறலாம்.
கரும்புத் தொட்டில் :
குழந்தை பாக்கியத்திற்கு வேண்டிக்கொள்கின்றன
பக்தர்கள் குழந்தைக்கு கரும்புத் தொட்டில் கட்டி அதில் குழந்தையைப் படுக்க வைத்து
கோவிலைச் சுற்றி வருகின்றனர்.
பிராத்தனை தலம் :
இங்கே பக்தர்களின் குறை தீர்க்கும் பிரார்த்தனை
தலம் உள்ளது. தன்னுடைய வேண்டுதல்கள் மற்றும் குறைகள் நிறைவேறும் வரை அங்கேயே
தாங்கி கொள்கின்றனர்.
திருவிழாக்கள் :
இடுக்கண்களையும் இருக்கன்குடியாளுக்கு ஆடி கடைசி
வெள்ளி, தை கடைசி வெள்ளி, பங்குனி கடைசி வெள்ளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன்
அருள் பெறக் கூடுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும்.
பிராத்தனைகள் :
கண்
சம்பந்தமான நோய்கள், வயிற்று வலி, அம்மை நோய், கை, கால் வலி உள்ளவர்கள், குழந்தை
வரம் வேண்டி, விரைவில் திருமணம் நடைபெற வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
அம்மனுக்கு
அக்கினிச்சட்டியும், ஆயிரங்கண்பானையும், உருவம் எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை
செலுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக