இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை
குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அதிலும் காலையில் தினமும் வெறும் வயிற்றில்
வெந்தய பொடியை நீரில் கலந்து குடித்தால், இன்னும் நல்ல பலன் தெரியும்.
வெந்தய விதைகள் மட்டுமின்றி, வெந்தய கீரையும்
இத்தகைய நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. எனவே அன்றாடம் சமைக்கும் போது சமையலில்
வெந்தயத்தை சிறிது சேர்த்துக் கொள்வதோடு, அடிக்கடி வெந்தயக் கீரையையும் சமைத்து
சாப்பிடுங்கள்.
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு
சிறந்த உதாரணம் வெந்தயமே. இது என்னதான் இயற்கை மருந்துப் பொருளாக பயன்பட்டாலும்,
மற்ற மருந்துகளை போல் இதிலும் சில பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கிறது.
பெண்கள் அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
- வெந்தயத்தை தினமும் 2 முதல் 5 கிராம் வரை இரு முறை எடுத்துக் கொண்டால், எந்த பக்க விளைவும் ஏற்படாது. வெந்தயத்தை அதிக அளவில்(100 கிராமிற்கு) மேல் எடுத்து கொள்பவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாக இருப்பது குமட்டல்.
- எல்லா கொழுப்பும் உடலுக்கு கேடு விளைவிப்பவை அல்ல. நீங்கள் எடையை அதிகரிக்க விரும்பினால் நிச்சயமாக இதனை சாப்பிடக்கூடாது.
- ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே ஈட்டிங் டிஸார்டர் எனப்படும் உணவுகோளாறுகள் இருந்தால் இதனை சாப்பிடும் எண்ணத்தை கைவிட்டு விடுங்கள். வெந்தயம் இந்த பிரச்சினையை மேலும் அதிகரிக்கும்.
- மாத்திரைகளுடன் சேர்த்து வெந்தயத்தினை சாப்பிடும் போது சர்க்கரையின் அளவை மிகவும் குறைத்துவிடும். இது அதிக ஆபத்தானது.
- கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக வெந்தயத்தை சேர்த்துக்கொள்ளக்கூடாது. வெந்தயத்தில் காணப்படும் சப்போனின் என்னும் வேதிப்பொருள் கர்ப்பப்பையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
- சிலருக்கு வெந்தயத்தையோ அல்லது வெந்தயத்தால் செய்யப்பட்ட உணவுகளையோ சாப்பிட்டவுடன் உடலில் இருந்து ஒருவித நாற்றம் வெளிப்படும்.
- உங்களுக்கு வேண்டியதால் அலர்ஜிகள் ஏற்படலாம், குறிப்பாக உங்களுக்கு ஏற்கனவே பட்டாணி, கடலை, சோயா போன்றவை அலர்ஜிகளை ஏற்படுத்துமாயின் வெந்தயம் அந்த அலர்ஜிகளை அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக