Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 செப்டம்பர், 2019

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் அதிசயம்!

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் அதிசயம்! 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், மக்னீசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நமது இரத்த அழுத்தத்தையும், இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

மேலும் கருவுற்ற காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், சுவாச பிரச்சனை மற்றும் ஜீரண பிரச்சனை போன்றவற்றிற்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
எனவே இப்படிப்பட்ட பட்டை தண்ணீரை தினமும் குடிப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு என்ன நன்மைகள் என்று அறிந்து கொள்ளுங்கள்.
ஆய்வுகள்
  • சர்க்கரை நோய் குறித்து ஏராளமான ஆய்வுகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
  • இதில் பட்டை தொடர்பாக வந்ததில் மிகவும் கவனிக்கத்தக்கது என்று சொன்னால் கடந்த 2003 ஆம் ஆண்டு டயாப்பட்டீஸ் கேர் என்ற ஒரு சர்க்கரை நோய் குறித்து பல ஆயவுக்கட்டுரைகளை வெளியிடும் பத்திரிக்கையில் இரு ஆய்வுக்கட்டுரை வெளியானது.
  • அதில், டைப் 2 வகை சர்க்கரை நோய் இருப்பவர்களின் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிப்பதும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும் இலவங்கப்பட்டை துணை புரிகிறது என்றார்கள்.
எப்படி உதவுகிறது?
1.      பட்டையில் சில முக்கியமான கெமிக்கல்கள் இருக்கின்றன. இவை இன்ஸுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. அதோடு ரத்தத்தில் இருக்கிற குலுக்கோஸை செல்களுக்குள் செலுத்த உதவிடும்.
2.      இதனால் ரத்தத்தில் இருக்கிற குலுக்கோஸ் அளவு குறையும்.
3.      சர்கரை நோயை தவிர்க்க அல்லது கட்டுக்கள் வைத்திருக்க இப்படித்தான் உதவுகிறது.
4.      சர்க்கரை நோயினை கட்டுப்படுத்தும் என்பதற்காக பட்டையை நாம் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளவும் முடியாது. பட்டையை அதிகமாக சாப்பிடும் போது குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் போது பட்டையில் இருக்கிற கோமரின் என்ற சத்து நம் உடலில் சேர்கிறது.
5.      இது அதிகப்படியாக சேரும் பட்சத்தில் கல்லீரலில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஏனைய நன்மைகள்
  • பட்டையில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.
  • தொண்டைப் புண் உள்ளவர்கள் பட்டைப் பாலைக் குடிப்பது நல்லது.
  • பட்டை குளுக்கோஸை வளர்சிதை மாற்றம் செய்ய உதவுவதுடன், கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.
  • பட்டையில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ஈறுகளைத் தாக்கும் பாக்டீரியாக்களை எதிர்க்க உதவும்.
  • பட்டை கொழுப்புக்களை உடைத்தெறிந்து, செரிமானத்தை மேம்படுத்தும்.
  • பட்டை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதுடன், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவும்.
  • ஒருவர் அன்றாடம் பாலில் ஒரு சிட்டிகை பட்டைத் தூளைக் கலந்து குடித்தால், அது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு, ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக