இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வாகனங்களை
கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் நீரை சேமிக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்று
செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில்
காணலாம்.
இந்தியாவின் தலையாய பிரச்னைகளில்
ஒன்றாக தண்ணீர் பற்றாக்குறை இருக்கின்றது. நாட்டின் ஒரு சில பகுதிகளில் அடை மழை கொட்டி
தீர்த்து வந்தாலும், பல பகுதிகளில் ஒரு சொட்டு நீருக்கு பல கிமீ நடந்து செல்லும் துயர
நிலை காணப்பட்ட வண்ணம் உள்ளது.
இதற்கு, மழை
பொய்த்து போனது ஒரு காரணமாக கூறப்படுகின்றது. ஆனால், நகர மயமாதலின் காரணமாக
அழிக்கப்பட்டு வரும் வனங்களே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
அதிகரித்து வரும் ஜனத் தொகை காரணமாக காடுகளின் அளவு ஒவ்வொரு
வருடமும் குறைந்துக்கொண்டே வருகின்றது. அதுமட்டுமின்றி, வளர்ச்சி என்ற பெயரில்
சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டுதல், புதிய சாலைகளுக்காக காடுகளை அழித்தல்
உள்ளிட்ட காரணங்களால் லட்ச கணக்கான மரங்கள் கொத்து கொத்தாக வெட்டி
சாய்க்கப்படுகின்றது.
இதன் பின்விளைவாக ஒவ்வொரு பருவத்திலும்
பொழிய வேண்டிய மழை பொய்த்து போகின்றது.
இதனால்,
பெருமளவிலான பாதிப்பைச் சந்திப்பது என்னமோ நம் நாட்டு விவசாயிகள்தான்.
விவசாயத்தில் பெரும் நஷ்டம் அடைவதன்காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும்
சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு,
நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில்,
வீணாக செலவு செய்யப்படும் தண்ணீரினை சேமிக்கின்ற வகையிலான ஓர் புதிய திட்டம்
கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி,
இனி வாகனங்களைக் கழுவ நீரை பயன்படுத்தக்கூடாது என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட
உள்ளது.
பயந்துவிடாதீங்க, இந்த அதிரடி உத்தரவு தமிழகத்திற்கு இல்லை.
பஞ்சாப் மாநில அரசுதான், அதன் மக்களின் எதிர்காலத்தை முன்னிட்டு இத்தகைய அதிரடி
நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றது.
அதேபோன்று,
இத்திட்டம் உற்பத்தி ஆலை மற்றும் சர்வீஸ் மையங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்தியாவின் பிரதான மாநிலங்களில் குறைந்தது ஒரு வாகன
உற்பத்தி மையமாவது இருந்துவிடுகின்றது. அதேபோன்று, விற்பனையாகும் கார்களை சர்வீஸ்
செய்வதற்கான சேவை மையம் ஏரளமாக தொடங்கப்படுகின்றன.
இவற்றின்மூலம்,
வாகனங்களை தூய்மைப்படுத்த நாள் ஒன்றிற்கு ஆயிரம் கணக்கான லிட்டர் தண்ணீர்
பயன்படுத்துகின்றது. இதனால், மக்களின் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படுகின்றது.
இத்தகைய
சூழலைத் தவிர்க்கும் விதமாக, வாகனங்களை தூய்மைச் செய்ய டிரை வாஷ் முறையை
கையாளுமாறு பஞ்சாப் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இம்முறை மூலம், அதிகபட்ச நீர்
வீணடிப்பது தவிர்க்கப்படும் என தெரிகின்றது.
அண்மையில், சென்னையில்
தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது, நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ராயல் என்பீல்டு
நிறுவனம், இத்தகைய நடவடிக்கையை தானாக முன்வந்து மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில்,
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த பிரத்யேக நடவடிக்கையை பஞ்சாப் மாநில அரசு,
அம்மாநிலத்தில் கட்டாயமாக கடைபிடிக்கக்கூறி அறிவிக்க இருக்கின்றது.
தோராயாமாக
ஒரு புதிய காரை சுத்தம் செய்ய 200 லிட்டர் முதல் 1,000 லிட்டர் வரையிலான தண்ணீர்
தேவைப்படுகின்றது. இது வாகனத்தின் உருவத்தைப் பொருத்து மாறுபடும். இது ஒரு சிறிய
கிராமத்தின் ஒரு நாள் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாகும்.
இந்த
அளவிலான நீர் வீணாவைத் தவிர்க்கும் விதமாக பஞ்சாப் மாநில அரசு இந்த அதிரடி
நடவடிக்கையை கையாள இருக்கின்றது.
இந்த
திட்டத்தை முதல் கட்டமாக மாநிலத்தின் ஆறு முக்கிய பகுதிகளான மொஹலி, லூதியானா,
ஜலந்தர், பதிந்தா, அமிர்தசரஸ் மற்றும் பாட்டியாலா உள்ளிட்ட இடங்களில்
அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதலில் சர்வீஸ் மையங்களிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட
உள்ளது. இதில் வெற்றியடையும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட
உள்ளது.
இதுகுறித்து,
பஞ்சாப் மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளர் அசோக்
சர்மா கூறியதாவது, "ஆட்டோமொபைல் சேவை நிலையங்களுக்கு நாள் ஒன்றிற்கு சுமார்
10 முதல் 12 வரையிலான கார்களை டிரை வாஷ் முறையில் சுத்தம் செய்யும்படி கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முறைகுறித்து வாடிக்கையாளர்களிடம் ரிவியூ பதில்
கோர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இத்திட்டம் நல்ல வரவேற்பைப்
பெறுமானால், இதனை மாநிலம் முழுவதும் நடைமுறைக்குக் கொண்டுவர
திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், "நீர் பற்றாக்குறை மற்றும் நீர்
பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பான பிரச்னைகள் குறித்து அறிந்தவர்கள், அரசின்
இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். ஒரு மாத முடிவிற்கு பின், பொதுமக்கள்
பதில் தொடர்பான தரவு தயாரிக்கப்பட்டு அரசாங்கத்திற்கு அனுப்பப்படும். இதன் பின்னரே
மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்படும்" என
தெரிவித்தார்.
டிரை வாஷ் என்பது, ரசாயனம் கலந்த ஸ்பிரே முறை மூலம் சுத்தம்
செய்யப்படும் செயலாகும். இது, சந்தையில் மிக எளிதில் கிடைக்கக் கூடிய ஓர் பொருள்.
இதனை பயன்படுத்துவதன் மூலம் வாகனத்திற்கோ அல்லது வாகனத்தின் நிறத்திற்கோ எந்த
பின்விளைவும் ஏற்படுத்தாது. மேலும், தண்ணீர் மூலம் கழுவினால் கிடைக்கக்கூடிய அதே
சுத்தம் டிரை வாஷ் முறையிலும் கிடைக்கும்.
இந்த ஸ்பிரே கெமிக்கல் குறைவான விலையிலும் கிடைக்கின்றது.
ஆகையால், மக்கள் இதனை பயன்பாட்டுக் கொண்டுவரும் பட்சத்தில் அதிகளவிலான விலை
மதிப்பற்ற நீர் பாதுகாப்படுவதுடன், எதிர்காலத்திற்கும் சேகரித்து வைக்க உதவும்.
இத்தகைய
திட்டம் பஞ்சாப் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஒன்று. கடந்த
காலங்களில் தமிழகம் சந்தித்த தண்ணீர் பற்றாக்குறை மிக வேதனையான ஒன்று. மேலும்,
தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்க்க ரயில் மூலம் நீர் கொண்டு வரப்பட்டது.
இத்தகைய சூழலைத் தவிர்க்க பஞ்சாப் அரசு மேற்கொண்டிருக்கும்
சிறப்பான நடவடிக்கையை, தானாக முன் வந்து வாகன நிறுவனங்கள் மற்றும் இதர மாநில
அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தியாவின் தண்ணீர் பஞ்சம் என்ற நிலை தற்போதுதான் என்று
இல்லை, பல ஆண்டுகளாகவே நிலவி வருகின்றது. இந்த சூழ்நிலையில், குடிநீரைக் கொண்டு
காரை கழுவியதற்காக பிரபல விளையாட்டு வீரருக்கு மும்பை மாநகராட்சி அபராதம்
விதித்திருந்தது. அவர் யார் என தெரிந்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ந்துபோவீர்கள்.
இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலமும் தண்ணீர் பஞ்சத்தால்
வாடி வரும்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர், தனது லக்சூரியஸ் காரை
குடிநீரைக் கொண்டு கழுவியுள்ளார். அவர் வேறு யாருமில்லை, நமது இந்திய கிரிக்கெட்
அணியின் கேப்டன் விராட் கோஹ்லிதான். இந்த சம்பவத்திற்காக, அவருக்கு மும்பை
நகராட்சி அதிகாரிகள் அபராதம் வழங்கினர்.
இதுகுறித்த, வீடியோவை ஏஎன்ஐ ஆங்கில செய்தி
தளம் வெளியிட்டிருந்தது. இந்தியாவில் கோடைக்காலம் துவங்கிவிட்டாலே, அதன் கூடவே அழையா
விருந்தாளியாக தண்ணீர் பிரச்னையும் ஆரம்பித்துவிடும். இந்த பிரச்னை தமிழகம்
மட்டுமின்றி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கக்கூடிய முக்கிய பிரச்னையாக
இருக்கின்றது.
அதிலும்,
கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2019ஆம் ஆண்டில் குடிநீர் பிரச்னை பூதகரமாக
வெடித்தது. இது, நாட்டின் அனைத்து மாநிலங்களிலுமே நிலவிய பிரச்னையாக இருந்தது.
இவ்வாறு, தண்ணீர் பிரச்னை நாடு முழுவதும் தலைவிரித்து ஆடியது.
இதற்கு அரசியல் உட்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
அதில், முக்கியமானதாக நீர் நிலைகளை சரிவர தூர்வாறாமல் இருப்பது மற்றும் பாதுகாக்காமல்
விட்டது என பல காரணங்கள் இருக்கின்றன. இதனாலயே, பல நீர்நிலைகள் தற்போது காய்ந்து
குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன.
ஆகையால்,
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரையே தங்களின் பயன்பாட்டிற்காக
உபயோகப்படுத்தி வருகின்றனர்.
சில பகுதிகளில் இதுகூட கிடைக்காமல், பிற பகுதிகளில் உள்ள
நீர் நிலை மற்றும் தண்ணீர் லாரிகளையே அன்றாட நீர் தேவைக்காக மக்கள்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு, நாடே குடி தண்ணீர் பிரச்னையில்
சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், விராட் கோஹ்லியின் சொகுசு காரை கழுவ
குடிநீர் பயன்படுத்தியுள்ளார்.
விராட் கோஹ்லி ஓர் கார் பிரியர் என்பது நாம், அனைவரும்
அறிந்த ஒன்று. அந்த வகையில், விராட்டின் கராஜில் பல லக்சூரி மற்றும் ஸ்போர்ட்ஸ்
கார்களின் அணி வகுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை ஏற்கனவே நமது
டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
அந்தவகையில், விராட்டிடம், பிஎம்டபிள்யூ 7 செரீஸ், பென்ட்லீ
கான்டினென்டல் ஜிடி, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக், ஆடி எஸ்5, ஆடி ஆர்எஸ்5, ஆடி
ஆர்8, ஆடி ஏ8எல் உள்ளிட்ட பல்வேறு கார்கள் உள்ளன. இதில், ஓர் லக்சூரி காரை
சாலையில் வைத்து கழுவிய குற்றத்திற்காகதான் விராட்டின் பணியாளருக்கு அபராதம்
விதிக்கப்பட்டது.
ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியில்தான் விராட் கோஹ்லி
வசித்து வருகிறார். இங்கு தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விராட்டின் பணியாளர்
ஒருவர் அவரது காரை கழுவுவதற்கும், வீட்டின் முகப்பு பகுதியை சுத்தம்
செய்வதற்காகவும் குடிநீரைப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரிலேயே இந்த
நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதுகுறித்து, குருகிராம் பகுதி நகராட்சி அதிகாரி யஸ்பல்
யாதவ் கூறியதாவது, "கோடை காலம் நிலவி வருவாதல், தண்ணீர் பஞ்சம் நாடு
முழுவதும் அதிகமாக நிலவி வருகின்றது. இதனால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரும்
அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், விராட் கோஹ்லியின் வீட்டில், குடிநீர்
வீணாக்குவதாக புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, தண்ணீரை
வீணாக்கிய அவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், "இவ்வாறு முறைகேட்டில் ஈடுபடும்
தனி நபருக்கு தற்போது ரூ. 1,000 ஆயிரமும், நிறுவனங்களுக்கு ரூ. 5,000 ஆயிரமும்,
அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற, விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள
தனி பறக்கும் படை ஒன்று தொடங்கப்பட்டிருப்பதாக" தெரிவித்தார்.
விராட் கோஹ்லி, தான் குடிப்பதற்காக ரூ. 600 மதிப்புள்ள
குடிநீரைப் பயன்படுத்துவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இந்த அதிர்ச்சியில்
இருந்தே அவரது ரசிகர்கள் மீளாத நிலையில், புதிய சிக்கலாக குடிநீரை சொகுசு கார்களை
சுத்தம் செய்ய பயன்படுத்தியது மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக