Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 செப்டம்பர், 2019

கலக்கலான கேரட் மேளா: பஜ்ஜி


 Image result for கலக்கலான கேரட் மேளா: பஜ்ஜி 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

கேரட்டைக் கண்டாலே காத தூரம் ஓடுவார்கள் குழந்தைகள் பலர். அதன் இனிப்புச் சுவையால் பெரியவர்களும் கேரட்டை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். கேரட்டில் பொரியல், அல்வா, கீர் போன்றவற்றைத் தவிர புதுமையாக எதையும் சமைக்காததும் கேரட்டை விருப்பப் பட்டியலில் இடம்பெற விடாமல் தடுக்கிறது. 
.
பஜ்ஜி

என்னென்ன தேவை?
கேரட் - 4
கடலை மாவு - 2கப்
அரிசி மாவு - முக்கால் கப்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கேரட்டை மெல்லிய துண்டுகளாகச் சீவிக்கொள்ளுங்கள். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயத் தூள், நெய் ஆகியவற்றைச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளுங்கள். நெய் பிடிக்காதவர்கள் 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய்யைச் சேர்த்துப் பிசையலாம். கேரட்டை இந்த மாவில் முக்கியெடுத்து எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக