இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்குதாரர்கள் எந்த ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் பணம் எடுத்தாலும் டெபாசிட் செய்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும்.
·
அக்டோபர் 16ஆம் தேதியில் முதல் ஐசிஐசிஐ வங்கியின்
புதிய கட்டண விதி அமல்.
·
இந்த விதி பிடிக்காவிட்டால் கணக்கை முடித்துக்கொள்ள
அறிவுறுத்தல்!
பிரபல தனியார் வங்கி ஒன்று சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளை முறித்துக்கொள்ளும்
அளவுக்கு கெடுபிடியான விதியை அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய தனியார் வங்கிகளில் ஒன்றாகத் திகழ்வது ஐசிஐசிஐ வங்கி. இந்த வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை கட்டுப்பாடு இல்லாத, ஜீரோ பேலன்ஸ், சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டணத்தை விதிக்கும் அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.
ஐசிஐசிஐ ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்குதாரர்கள் எந்த ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் பணம்
எடுத்தாலும் 100 ரூபாய் முதல் 125 ரூபாய் வரை கட்டணம் பெறப்படும். இதேபோல பணத்தை டெபாசிட்
செய்வதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த புதிய விதிமுறை குறித்து வெள்ளிக்கிழமை அதன் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட வழிகளில் தெரியப்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 16ஆம் தேதியில் இருந்து புதிய கட்டண விதி அமலுக்கு வரும் என்றும் தெரிவித்திருக்கிறது.

இந்த விதிமுறை ஒத்துவராது என்று நினைத்தால், ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கில்
இருந்து வேறு சேமிப்புக் கணக்குகளுக்கு மாறிக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
அல்லது ஒரேயடியாக கணக்கையே முடித்துக்கொண்டுவிடலாம் என்றும் தடாலடியாகக் கூறிவிட்டது.
"வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கிறோம். இதன் மூலம் அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு பங்களிப்பு செய்கிறோம்" என ஐசிஐசிஐ வங்கி கூறுகிறது.
இதன்படி, என்இஎப்டி (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் யுபிஐ (UPI) போன்ற வழிகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டணங்களையும் ஐசிஐசிஐ வங்கி ரத்து செய்திருக்கிறது.
தற்போது ஐசிஐசிஐ வங்கிக் கிளைகளில் செய்யப்படும் என்இஎப்டி (NEFT) முறை பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 2.25 ரூபாய் முதல் 24.75 ரூபாய் வரை உள்ளது. இது 10,000 ரூபாய்க்கு உட்பட்ட மற்றும் 10 லட்சம் ரூபாய் வரையான தொகைக்கு மட்டும் பொருந்தும். ஆர்டிஜிஎஸ் (RTGS) முறையில் 2 லட்சம் ரூபாய்க்கு மேலான மற்றும் 10 லட்சம் ரூபாய் வரையான தொகைகளின் பரிவர்த்தனைக்கு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் கட்டணம் பெறப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக