இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
குழந்தைகள் விளையாடுவதோடு மட்டுமில்லாமல்
அதில் கொஞ்சம் பாட்டுகளை பாடி மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம் குதூகலமாக
இருப்பார்கள்.
அவ்வாறு பாடலோடு கலந்து விளையாடும் விளையாட்டுகளில்
ஒன்றான குழந்தைகளுக்கு உற்சாகத்தை தரும் ஒருபத்தி இருபத்தி விளையாட்டை பற்றி பார்க்கலாம்.
எத்தனை பேர் விளையாடலாம்?
பல பேர்
எப்படி விளையாடுவது?
விளையாடும் குழந்தைகள் அனைவரும் மைதானத்தில்
நடுவில் வட்டமாக உட்கார்ந்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் அவர்களின் கைகளை ஒன்றை தலையின்
மீது வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நடுவராக ஒரு நபரை தேர்வு செய்துக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு நடுவராக தேர்வு செய்த நபர் வட்டமாக
உட்கார்ந்திருக்கும் குழந்தைகளின் தலையில் கையை வைத்து பாட்டு பாடிக்கொண்டு வர வேண்டும்.
பிறகு பாட்டு முடியும்போது எந்த குழந்தையின்
மீது நடுவர் கை இருக்கிறதோ அந்த குழந்தை மட்டும் தன் தலையில் இருக்கும் கையை எடுத்துக்கொள்ளலாம்.
அந்த குழந்தைத்தான் விளையாட்டில் பூனைக்குட்டியாக
இருக்க வேண்டும். மீண்டும் பாடலை தொடர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
அதன்பின் ஒவ்வொரு குழந்தையின் தலையின்
மீது நடுவர் கை வைக்கும்போது நிகழும் பாடல்,
முருக்கந்தண்டு தின்றவரே,
முள்ளிச்சாறு குடித்தவரே,
தார் தார் வாழைக்காய்,
தமுரு குத்தி வாழைக்காய்,
பூப்பூ மண்டலம்,
பூமாதேவி கை எடு.
அப்போது எந்த குழந்தை கையை எடுக்கிறதோ
அந்தக் குழந்தை பூனைக்குட்டி ஆகும்.
அதன்பின் மீண்டும் உரையாடல் பாடல் தொடங்கும்,
ஏ முதல் பூனைக்குட்டி,
ஓய்மாரியம்மன் கோயிலுக்கு நெல்லுக் குத்த
வாரியா
என் பிள்ளை அழுவுது
உன் அம்மாகிட்டே கொடுத்துவிட்டு வா போமாட்டேங்குது
பாட்டிகிட்டே போமாட்டேங்குது
அப்பாகிட்டே போவுது
கொடுத்துட்டு வா
எத்தனை எட்டிலே வாரே
10 எட்டிலே.
கடைசியாக எத்தனை எட்டிலே (அடி) என்று சொல்கிறார்களோ
அத்தனை எட்டில் செல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக