Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

அபிஷேக பால் தயிராக மாறும் அதிசய முருகன் கோவில்!

 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 எங்கெல்லாம் குன்று உள்ளதோ அங்கெல்லாம் குமரன் இருப்பான் என்று பண்டைய இந்து வேதங்கள் கூறுகின்றன. அதற்கேற்றாற் போல அருள்மிகு பாலமுருகன் கோவில் வேலூர் மாவட்டம், திருமணிக்குன்றம் அருகே ரத்னகிரி மலையில் அமைந்துள்ளது.

இக்கோவில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான முருகன் கோவிலாகும். இங்கு வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் நடைபெறுவது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் ஆச்சரியமாக திகழ்கிறது.

 இம்மலையில் முருகன் அருள்பாலிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு முருகன் அருள் எங்கும் எதிலும் பரவிக் காணப்படும்.

இக்கோவிலில் உள்ள தெய்வீக சக்தி மூன்று வடிவங்களில் அதன் ஆசீர்வாதங்களை வெளிப்படுத்துகிறது.

 சன்னதியில் முருகன் சிலை வடிவில் அமைந்துள்ளது.

 சுவாமி பாலமுருகன் அடிமை வடிவத்தில் அமைந்துள்ளது.

பக்தர்கள் வடிவில் அமைந்துள்ளது.

அதிசயங்கள் :

 இக்கோவில் வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசயமாக இம் மலைமீது காகங்கள் பறப்பதில்லை.

 இம்மலையில் கோவில் கொண்டுள்ள முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால், சிலமணித்துளிகளிலேயே அந்த அபிஷேக பால் தயிராக மாறுவது பக்தர்கள் அனைவரையும் அதிசயிக்க வைப்பதாக இருக்கிறது.

 இத்தல முருகனுக்கு பூஜையின் போது மலர்கள், நைவேத்யம், தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையில் இருப்பது மேலும் சிறப்பாகும்.

 பொதுவாக சிவனுக்கு தான் அன்னாபிஷேகம் செய்வது வழங்கம். முருகன் சிவனிலிருந்து தோன்றியதால் இவர் சிவ அம்சமாகிறார். எனவே இவருக்கும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

மேலும் இங்கு முருகன் பால வடிவில் இருப்பதால் கந்த சஷ்டியின் போது சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக