>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 6 செப்டம்பர், 2019

    புத்திர தோஷம் வரக் காரணம் என்ன ?

     Image result for புத்திர தோஷம் வரக் காரணம் என்ன ?
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



     நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமையும். முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைப்படுத்தினால் அவர்களின் சாபத்தால் புத்திர தோஷம் வரும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. முன்னோர்களுக்கு முறையாக ஈமக்கடன் செய்யாமல் இருந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும் என கூறப்படுகிறது.

     முற்பிறவியில் ஆன்மீக அடியவர்களையும், மகான்களையும் அவமானப்படுத்தியிருந்தால் புத்திர தோஷம் ஏற்பட்டு, பிறக்கும் குழந்தை வளர்ச்சியற்ற குழந்தையாகவோ, ஊனமுற்ற குழந்தையாகவோ பிறக்கும்.

     அந்தணரைக் கொன்றாலோ, குல தெய்வக் குற்றத்தாலோ, மரங்களை காரண காரியமின்றி வெட்டியதால் உண்டான சாபத்தாலோ புத்திர தோஷம் ஏற்படும். தாய்மாமனால் சாபம் ஏற்பட்டாலும் புத்திர தோஷம் உண்டாகும்.

    புத்திரனால் சொத்து இழப்பு :

     புத்திர ஸ்தானதிபதி 5,8,12 போன்ற இடங்களில் அமையப் பெற்றிருந்தாலும் அசுபர் பார்வை பெற்றாலும் அவருடைய பிள்ளைகள் கெட்டபுத்தி உள்ளவர்களாகவும், திருடர்களாகவும் இருப்பர்.

     அதுபோல 5-ம் வீட்டிற்கு அதிபதி பலவீனம் அடைந்து விரயாதிபதி என்று சொல்லப்படும் 12-ம் வீட்டிற்கு அதிபதியோடு கூடினாலும் புத்திரனால் பணவிரயம், சொத்து இழப்பு போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

     புத்திரஸ்தானதிபதி பாவகிரகத்தின் நவாம்சம் அடைந்தாலும் புத்திரனால் பொருள் இழப்பு உண்டாகும். எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

    புத்திர வழியில் சந்தோஷம் யாருக்கு?

     புத்திரஸ்தானதிபதி புத்திரஸ்தானத்தில் அமையப்பெற்று 9-ம் வீட்டிற்கு அதிபதி 9-ல் வீற்றிருந்தால் புத்திர வழியில் சந்தோஷம் ஏற்படும். அவரோடு புத்திரகாரகனாகிய குருவும் இணைந்து காணப்பட்டால் புத்திர வழியில் சந்தோஷமும் பூரிப்பும் ஏற்படும்.

    புத்திர வழியில் கெடுதி யாருக்கு?

    புத்திர ஸ்தானத்தில் 6-ம் வீட்டிற்கு அதிபதி அமையப்பெற்றாலும் புத்திர ஸ்தானதிபதி பகைவர்களோடு கூடி பலம் குன்றியிருந்தாலும், புத்திர வழியில் சஞ்சலம், பொருள் இழப்பு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக