Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

பித்ரு தோஷம்...!

 Image result for பித்ரு தோஷம்...!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



தோஷங்களில் மிக கொடுமையான தோஷம் பித்ரு தோஷம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதக அமைப்பானது பித்ரு தோஷ அமைப்பாகும்.

பித்ரு தோஷம் ஏற்படக் காரணம் என்ன?

நமது தாய் வழி மற்றும் தந்தை வழி வாழ்ந்து மறைந்துபோன முன்னோர்கள் நமது பித்ருக்கள் ஆவர். பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடையாததால் ஏற்படும் தோஷமே பித்ரு தோஷம்.

ஒருவர் முற்பிறவியில் தாய் தந்தையை கவனிக்காமல் இருந்தால், அதற்காக பெற்றோர்கள் சாபமிடுவதால் மறுபிறவியில் அவர்கள் பித்ரு தோஷ ஜாதகத்துடன் பிறக்கிறார்கள். அதேபோல் யார் ஒருவர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை கொடுமை செய்கிறார்களோ அவர்களும் மறுபிறவியில் பித்ரு தோஷத்துடன் பிறக்கிறார்கள்.

கருச்சிதைவு செய்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.

பித்ரு தோஷம் என்ன செய்யும் :

பித்ரு தோஷ ஜாதக அமைப்பு கொண்ட ஜாதகருக்கு திருமணம் மிக தாமதமாக நடக்கும் அல்லது திருமணம் நடக்காமலும் இருக்கும். அப்படி திருமணம் நடந்தாலும் விவாகரத்து ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

கணவன் மனைவியிடையே அன்யோன்யம் இருக்காது, வெறுப்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை கசக்கும்.

ஒரு சிலருக்கு பல முறை திருமணமும் கலப்பு திருமணமும் நடைபெறும். ஒரு சிலர் பெற்றோர்களுக்கு தெரியாமல் இரகசிய காதல் திருமணம் செய்து கொள்வர்.

பித்ருக்கள் நமக்கு கொடுக்கும் சாபம் கடவுளிடம் நமக்கு கிடைக்கும் வரங்கள் அனைத்தையும் பித்ரு தேவதைகள் நம்மை அனுபவிக்கவிடாது.

பித்ரு தோஷ பரிகாரங்கள் :

பித்ரு தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யாமல் இருந்தால் அவர்கள் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்து வருவார்கள். எத்தனை கோவில்களுக்கு சென்று வந்தாலும் பித்ருவிற்கு பரிகாரம் செய்யாமல் பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகாது.

ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும். மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வது அவசியம்.

திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர் தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதுர் திருப்தி ஏற்படுத்தும்.

அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.

அமாவாசை அவிட்ட நட்சத்திரத்தில் வரும் காலங்களில் பித்ருக்களை நினைத்து அன்னதானம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக