இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பொதுவாக
ஒவ்வொரு கோவிலிலும் சில ஆச்சரியமான அற்புதங்கள் நடைபெறும். அதற்கு காரணம் அங்கு
காணப்படும் கடவுளின் சக்தியாகும். அப்படி ஒரு அதிசய நிகழ்வு
ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது.
பல
அற்புதமான காட்சி அமைப்புகளோடு அழகான இடமான கோவில் பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில்
இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே குன்றின் மீது எழில்மிகும் அழகோடு கட்டழகர்
கோவில் மலை உச்சியில் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றது.
இங்கு
சுந்தரவல்லி, சௌந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள
இக்கோவிலுக்கு செல்ல 247 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிகட்டுகள் தமிழ்
எழுத்துகள் 247-ஐ உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
மேலும் இந்த மலை மீது 'சிலம்பு ஊற்று" என்ற
தீர்த்தம் இருக்கிறது. இது அங்குள்ள நாவல் மரப் பொந்தில் இருந்து உற்பத்தியாவது
அதிசயமான ஒன்றாகும்.
அந்த நீரூற்றின் நீர் கீழ்நோக்கி மட்டுமே
செல்கின்றது. அக்காட்சி காண்பவர் மனதை கொள்ளை கொள்கின்றது.
கோவிலின்
பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக