இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram:
pudhiya.podiyan
Contact us :
oorkodangi@gmail.com
வேலைக்கு
வராத ’டாக்டரை’ மக்கள் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம்
மாநிலம் ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள டியோக் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்த
சுக்ரா மஜ்ஹி ( 33 ) என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் அவரை தேயிலை
தோட்டத்தில் செயல்படும் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
ஆனால்
மருத்துவர் வெளியில் சென்றுவிட்டதாக தெரிகிறது. அவருடம் அங்குவேலை பார்க்கும்
மருந்துநரும் விடுமுறையில் இருந்துள்ளார். அப்போது ஒரு நர்ஸ் மட்டும்தான் பணியில்
இருந்துள்ளார். அவர் சுக்ராவை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளார்.
இதனையடுத்து,
உடல்நிலை மேலும் மோசமடைந்த சுக்ரா உயிரிழந்துவிட்டார். பின்னர் மாலையில்
மருத்துவர் அங்கு வந்துள்ளார். சுக்ராவின் மரணத்தை தாங்க முடியாத தொழிலாளர்கள்
அவரை சரமாறியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த மருத்துவர் தேன் தத்தா
(73)ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார்.
இந்த
சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார்
வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக