Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

பூசணிக்காய் இருக்கா?

 Image result for பூசணிக்காய் இருக்கா?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு நேரமே இல்லை என்று சொல்லலாம். அவர்கள் முழுநேரத்தையும் கல்விக்கே செலவிடுகிறார்கள்.

தினமும் ஒரு மணி நேரமாவது குழந்தைகள் வெளியில் விளையாட வேண்டும். அவ்வாறு விளையாடும்போது அவர்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

அந்த வகையில் நாம் இன்று வித்தியாசமான விளையாட்டுகளில் ஒன்றான பூசணிக்காய் இருக்கா? விளையாட்டை பற்றி பார்க்கலாம்.

எத்தனை பேர் விளையாடலாம்?

பல பேர் ஒன்று சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

முதலில் இந்த விளையாட்டை விளையாடும்போது மைதானத்தில் குழந்தைகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அமர்ந்துக்கொள்ள வேண்டும்.

அதன்பின் இரு குழந்தைகள் தோட்டக்காரி மற்றும் பூசணிக்காய் வாங்குபவராக செயல்பட வேண்டும்.

பின்பு பூசணிக்காய் வாங்க வரும் நபர் தோட்டக்காரியை பார்த்து பூசணிக்காய் இருக்கா? என்று கேட்க வேண்டும்.

அதற்கு தோட்டக்காரி 'இப்பத்தான் பூப்பூத்திருக்கு" என்று சொல்ல வேண்டும். மீண்டும் வேறு ஒரு நபர் வந்து தோட்டக்காரியிடம் பூசணிக்காய் இருக்கா? என்று கேட்க வேண்டும். அதேபோல் தோட்டக்காரியும் 'இல்லை இப்பதான் பிஞ்சு விட்டுருக்கு" என்று கூற வேண்டும்.

இவ்வாறே, ஒவ்வொரு நபரும் தோட்டக்காரியிடம் வந்து கேட்க வேண்டும். அதற்கு அவள் பூசணிக்காயின் வளர்ச்சியை பற்றி ஒவ்வொன்றாக சொல்ல வேண்டும்.

அதன்பின் இறுதியாக பூசணிக்காய் விற்பனைக்கு தயார் நிலையில் இருக்கும்போது கேட்டு வரும் நபரிடம் தோட்டக்காரி தன் பின்னால் இருக்கும் குழந்தைகளை காண்பித்து உங்களுக்கு எந்த பூசணிக்காய் வேண்டும் என்று கேட்பாள்.

பிறகு அந்த நபர் எந்த பூசணிக்காய் வேண்டும் என்று சொல்கிறாரோ? அந்தக் குழந்தையை நான்கு பேர் பூசணிக்காய் தூக்குவதைப்போல் தூக்கிக் கொண்டு போக வேண்டும். பின்பு அந்த பூசணிக்காயை எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்பதை போல் நடித்து காட்ட வேண்டும்.

பலன்கள் :

தாவர வளர்ச்சியின் பருவத்தை அறிந்துக்கொள்ளலாம்.

குழு ஒற்றுமை மேம்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக