இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பாலம் என்பது தடைகளை கடப்பதற்காக கட்டப்படும் அமைப்புகள் ஆகும். சிறிது நேரத்தில் பயணம் செய்ய பாலங்களை அமைக்கிறார்கள். பொதுவாக ஆற்றைக் கடந்துச் செல்ல நாம் பாலங்களை பயன்படுத்துவோம்.
நாம் பயன்படுத்தும் பாலங்கள் இரும்புக் கம்பிகள், சிமெண்ட், மரப்பலகைகளால் தான் கட்டப்பட்டிருக்கும். ஆனால் வேர்களாலேயே உருவான பாலம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த பாலத்திற்கு உயிர் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்...
வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவின் தென் பகுதியில் அமைந்துள்ளது வளரும் வேர்ப்பாலம். இந்த பாலத்திற்கு செல்வதற்கு சமதளமான சாலைகள் கிடையாது. அடர்ந்த காட்டுக்கு நடுவே மலைப் பிரதேசத்தில் மேடுகளிலும், பள்ளங்களிலும் ஏறி இறங்கித்தான் செல்ல வேண்டும்.
இவ்வகை பாலங்கள் காசி மற்றும் ஜெய்ந்தியா மலைப்பகுதிக்கு இடையில் காணப்படுகின்றன.
இந்த பாலத்தை உயிர்ப் பாலம் என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் வேர்ப்பாலம் வளர்ந்துக் கொண்டே இருப்பதால்தான்.
ஒற்றை வேர் பாலத்திற்கு செல்லும் வழியில் சில இடங்கள் படிக்கட்டுகளாகவும், சில இடங்கள் செங்குத்தாகவும் இருக்கும். நடுவில் பெரிய பெரிய பாறைகளுக்கு இடையே தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கும். இதையும் கடந்து சென்றால் ஓர் ஒற்றை வேர்ப்பாலம் அமைந்து இருக்கும்.
சுமார் 3000 படிக்கட்டுகள் ஏறி இறங்கினால் நாங்கிரியாட் என்ற கிராமம் வரும். இங்குதான் இரட்டை அடுக்கு வேர்ப்பாலம் அமைந்துள்ளது. இந்த இரட்டை அடுக்கு பாலம் வேறு எங்கும் காண முடியாத அதிசயமாகவும், இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இங்கு அதிகமான நீர்வீழ்ச்சிகளும், ஆறுகளும் ஏராளமாக இருக்கின்றன. மக்களின் தேவையின் அடிப்படையில் உருவானதுதான் இந்த வேர்ப்பாலம் ஆகும்.
பாலங்களை அமைப்பதற்கு இரு பக்கங்களிலும் பிடித்துக்கொள்வதற்கு வசதியாக, வேர்களாலேயே கயிறுபோல் அமைத்திருக்கிறார்கள். நடக்க வசதியாகப் பாலத்தின் நடுவில் தட்டையான கற்களையும் வைத்திருக்கிறார்கள். இரண்டடி அகலத்திற்கு இந்தப் பாலத்தைக் கட்டுகிறார்கள்.
இந்த உயிருள்ள வேர்ப்பாலத்தை 15 ஆண்டுகள் வளர்ந்தப் பிறகுத்தான் பயன்படுத்துகிறார்கள். வேர்பாலங்கள் வளர வளரத்தான் அதன் வலிமை அதிகரிக்கின்றன. இதுபோன்ற சில வேர்ப்பாலங்கள் 500 ஆண்டுகளைக் விட பழமையானதாக இருக்கின்றன. பாலத்தின் ஆயுள் மரங்களின் வேர் ஆரோக்கியமாக உள்ளவரை நீடிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக