Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

கோவை... வ.உ.சி. உயிரியல் பூங்கா...!!

 Image result for கோவை... வ.உ.சி. உயிரியல் பூங்கா...!!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



கோவை மாநகரத்தில் பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன. அதில் சிறப்புமிக்க ஒன்றுதான் வ.உ.சி. உயிரியல் பூங்கா.

கோவையிலிருந்து ஏறத்தாழ 3கி.மீ தொலைவிலும், மேட்டுப்பாளையத்திலிருந்து 35கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இடம்தான் வ.உ.சி. உயிரியல் பூங்கா.

சிறப்புகள் :

சிறு மிருகக்காட்சி சாலை, சிறுவர் ரயில், சிறுவர் விளையாட்டுக் கருவிகள் ஆகியவை இப்பூங்காவில் உள்ளன. அருகில் விளையாட்டு அரங்கமும் உள்ளது.

பூங்காவில் உள்ள குட்டி ரயிலில் பயணித்தால் போதும். மலைக்காடுகள், குகைவெளி, துள்ளி ஓடும் கடமான்கள், புள்ளி மான்கள், ஒட்டகம் என அனைத்து வகையான உயிரினங்களையும் பார்த்து மகிழலாம்.

அது மட்டுமில்லாமல் மலைக் குகைக்குள் புகுந்து செல்வது போலவே செயற்கை மலைக் குகைகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

இப்படி இயற்கையான சூழலில் குட்டி ரயில் பயணிக்கும்போது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும்கூட ஊட்டி ரயிலில் பயணித்த அனுபவத்தைப் பெற முடியும்.

உயிரியல் பூங்காவுக்குள் பல்வேறு வகையான பாம்புகள், முதலைகள், குரங்குகள், மயில்கள், பறவைகள், பல்வேறு விதமான குரங்குகள் என பல உயிரினங்கள் காட்சிக்காக கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே சிலையமைப்புகளும், வண்ண மீன்கள் நிலையமும் அமைந்துள்ளது.

இதுதவிர பூங்காவுக்குள் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உட்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் உள்ளன.

விடுமுறை நாட்களை ஜாலியாக அனுபவிக்கக் குழந்தைகளுக்குக் கோவை வ.உ.சி. பூங்கா மிகவும் ஏற்ற இடம்.

எப்படி செல்வது?

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. கோவை ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ அல்லது பேருந்து மூலம் வ.உ.சி.பூங்காவிற்குச் செல்லலாம்.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

கோவையில் பல்வேறு வகையான கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

இதர சுற்றுலாத்தலங்கள் :

மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர்.
வால்பாறை.
வெள்ளியங்கிரி மலை.
ஈஷா யோகா மையம்.
கோவை குற்றாலம்.
மருதமலை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!