Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 செப்டம்பர், 2019

கொப்பளிக்கும் வெந்நீர் ஊற்று...!!

Image result for கொப்பளிக்கும் வெந்நீர் ஊற்று...!!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


இயற்கையின் அழகான படைப்பில் பல பல அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

 அதில் ஒரு சில விஷயங்கள் மட்டுமே தீர்வு கண்டுபிடிக்கும் வகையில் அமைந்துள்ளன... ஆனால் அந்த தீர்வுகளுமே ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதா? என்பது ஒரு கேள்விக்குறியாகவேதான் இருக்கிறது.

 நம் உலகில் உள்ள தீர்வு கண்டுபிடிக்க முடியாத அதிசயங்களில் ஒன்றான வெந்நீர் ஊற்றை பற்றிதான் இன்று தெரிந்து கொள்ளப்போகிறோம்...

 வெந்நீர் உற்று என்பது தெரிந்த விஷயம்தான்.... ஆனால் எரிமலையைப் போல் பூமியிலிருந்து வெடித்து வெளியேறும் ஒரு ஊற்று இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

 ஆமாம்... அமெரிக்காவில் உள்ள வயோமிங்  என்ற பகுதியில் உள்ள இந்த ஆச்சரியம் மிக்க வெந்நீர் ஊற்று அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
நீரானது, நீராவியுடன் சேர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படும் ஒரு நீர் நிலையைத்தான் வெந்நீர் ஊற்று அல்லது வெந்நீர்ச்சுனை என்கிறோம்.

 புவியின் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகையான வெந்நீரூற்றுகள் இருப்பதனால், இது ஒரு அரிதான தோற்றமாகவே கருதப்படுகிறது.

 இது அமெரிக்காவில் உள்ள எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது.

 இந்த பூங்காவின் முக்கிய சிறப்பம்சமே இதன் மையப்பகுதியில் அமைந்துள்ள  வெந்நீர் ஊற்றுதான்.

 உலகில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற வெந்நீர் ஊற்றுகள் இருந்தாலும் மிக அதிகமாக சுற்றுலாப்பயணிகளை கவரும் இடமாக ழடன கயiவாகரட வெந்நீர் ஊற்று அமைந்துள்ளது.
தினமும் இந்த வெந்நீர் ஊற்றானது ஏறத்தாழ 3700 முதல் 4000 கேலன்கள் வெந்நீரை 106 முதல் 185 அடி உயரம் வரை பீய்ச்சி அடிக்கிறது.
 தொடர்ந்து ஒன்றரை முதல் ஐந்து நிமிடம் தொடரும் இந்த செயல் அனைவரையும் அதிகம் கவரும் வகையில் அமைந்துள்ளது.
 மேலும் இதன் வெப்பநிலை சுமார் 129 டிகிரி செல்சியஸ் என குறிப்பிடப்படுகிறது.

இந்த நீர் ஊற்று ஏன் இவ்வளவு கொதிக்கும் தண்ணீரை வெளியேற்றுகிறது என்று ஆய்வு செய்ய நினைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த செயல்பாடு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.

இதற்கு என்ன காரணம் என்று இன்றளவும் தெரியவில்லை என்பதே ஆராய்ச்சியாளர்களின் பதிலாகவே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக