இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மிருகக்காட்சி
சாலை, பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்குப் போவது என்றாலே நமக்கு ஜாலிதான்.
விலங்குகள், பறவைகள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.
மிருகக்காட்சி சாலைகளிலேயே நாம் அணில்களையும்
பார்த்திருப்போம். ஆனால், அணில்களுக்கென்று ஒரு சரணாலயம் தமிழ்நாட்டில்
இருக்கிறது. அதுதான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல்
நிற அணில் வனவிலங்கு சரணாலயம்.
சிறப்புகள் :
இந்த சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி
மலைப்பகுதியில் உள்ள செண்பகத்தோப்பில் 1989ஆம் ஆண்டு 480 ச.கி.மீ. பரப்பளவில்
நிறுவப்பட்டது.
இதனை நரைத்த அணில் வனவிலங்கு சரணாலயம் என்றும்
அழைப்பர். இந்த அணில்கள் சாம்பல் நிற முதுகுப் பகுதி, இளஞ்சிவப்பு மூக்கு,
அடர்த்தியான முடியுடன் கூடிய நீண்ட வால் என பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.
இந்த
சாம்பல் நிற அணில் 1 முதல் 1.8 கிலோ எடையுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறிய பூனை
அளவிலும் இருக்கும். இவை மூக்கிலிருந்து வால் வரையிலும் 73.5 செ.மீ நீளமும், வால்
பகுதி மட்டுமே 36 - 40 செ.மீ நீளமும் கொண்டவை.
இந்த வகை அணில்கள் அருகருகேயுள்ள மரங்களின்
உச்சிக்கிளைகள் சந்திக்கும் உச்சியில் கூடு கட்டி வாழ்கின்றன. ஏதேனும்
அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது மரத்திற்கு மரம் தாவிச் செல்லும்.
ஒரு சாம்பல் நிற அணிலின் சராசரி வசிப்பிடப்
பரப்பு 1.970 சதுர மீட்டர் முதல் 6.110 சதுர மீட்டர் ஆகும். இவை பொதுவாக மரங்களின்
உச்சியிலே வாசம் செய்யும்.
இச்சரணாலயத்தில் நரை அணில்கள் மட்டுமல்ல புலி,
சிறுத்தை, வேங்கைப்புலி, புள்ளி மான், சிங்கவால் குரங்கு, லாங்கூர், சோலைமந்தி,
கருமந்தி, வெள்ளை மந்தி, தேவாங்கு, கரடி, பறக்கும் அணில் உள்ளிட்ட பல அநேக
விலங்குகளை பார்க்க முடிந்தாலும், இந்தச் சரணாலயம் சாம்பல் நிற அணிலுக்கே பெயர்
பெற்றது.
எப்படி செல்வது?
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மதுரை, திருநெல்வேலி,
விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகளின் மூலம் செல்லலாம்.
அருகில் உள்ள ரயில் நிலையம் :
மதுரை ரயில் நிலையம்.
அருகில் உள்ள விமான நிலையம் :
மதுரை
விமான நிலையம்.
இதர சுற்றுலா தலங்கள் :
அழகர்கோவில் பள்ளத்தாக்கு
மருத்துவ மூலிகை கொண்ட சதுரகிரி
பிரசித்தி பெற்ற காட்டழகர் கோவில்
தனிப்பாறை
பிலவாக்கல் அணை
கொய்லார் அணை
மீன்வெட்டிப் பாறை நதி நீர்வீழ்ச்சி
மலையேற்றம்
செய்ய விரும்புபவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம் ஏற்ற இடமாக திகழ்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக