இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஊரில்
எங்கு பார்த்தாலும் சுவரொட்டிகளும், கட்டவுட்டுகளுமாக விழாக்கோலம் பூண்டிருந்தது.
பெரிய ஊராக இருந்ததால் பல சாதி மக்களும் வாசம் பண்ணும் வாசமுள்ள ஊர். சாதிச்
சண்டைகள் இல்லாவிட்டாலும், சாதீய ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலில்லை.
சமூக
அக்கறையுடன் மாமனிதராக வாழ்ந்தவர். அவருடைய திரு உருவச் சிலையை நிருவி அவருக்கு
மரியாதை செலுத்துவதற்காக அவர் சார்ந்த சமுதாய மக்களால் விழா எடுக்கப்படுகிறது.
அவர் வாழும் போது தமிழகமே அவரால் தலை நிமிர்ந்தது. அந்த வீரத் திருமகனார்
தேசப்பற்றால் சுதந்திரத்திற்காக பல தியாகங்களைச் செய்தார். தன்னலமற்ற சேவையை தமிழ்
மக்களுக்காக செய்தார்.
சிலை
திறப்புவிழா சுவரொட்டிகள் நகரை அலங்கரித்தது. ஆற்றின் இரு கரைகளிலும் பெரும்
மரங்கள் உயர்ந்து நிமிர்ந்து நிற்பது போல் சாலையின் இரு புறங்களிலும்
கட்டவுட்டுகள் கட்டப்பட்டிருந்தன. சிறியதும் பெரியதுமாக வகைவகையாக சாலையின்
ஜன்னல்களாக காட்சியளித்தன.
மாலை
நேரம் பள்ளிக்கூடம் விட்டு மாணவ - மாணவியர் கூட்டம் கூட்டமாக வெளியேறிக்
கொண்டிருந்தனர். சும்மாவே வேடிக்கைப் பார்ப்பார்கள். இத்தனைக் கட்டவுட்டுகள்
என்றால் சும்மாவா போவார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டே, ஒவ்வொரு
கட்டவுட்டுக்கும் மதிப்பெண் கொடுத்துக் கொண்டே சென்றார்கள்.
ஐயாக்கண்ணு.
ஆறாம் வகுப்பு படிக்கிறான். மாணவர்கள் எல்லோரும் வீடுளுக்கு விரைந்து கொண்டிருக்க
இவன் மட்டும் ஒரு சுவரொட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தான். சுவரில் கைக்கெட்டிய
தூரத்தில் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப் பெருமகனார் படத்தையே உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தான். கூட வந்த நண்பன், வாடா போகலாம் என்றான். ஆனால், ஐயாக்கண்ணு நீ
போடா நான் மெதுவாக வருகிறேன், என்று அவனை அனுப்பிவிட்டு சுவரொட்டியில் இருந்த
பெருமகனார் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சுவரொட்டியை
ஒட்டியவர்கள் மற்றும் அந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் நகரைச் சுற்றி வந்தார்கள்.
சுவரொட்டிக்கும், கட்டவுட்டுகளுக்கும் பதுகாப்பாக குழுக் குழுவாக சுற்றி
வந்தார்கள். ஏனென்றால் சுவரொட்டிகளில் இடம் பெற்றிருக்கும் பெருமகனார் படத்தை
யாரும் அவமதித்து விடக்கூடாது என்பதற்காக. ஐயாக்கண்ணு தன்னுடைய புத்தகப்பையில் இருந்து
ஒரு ஸ்கெட்ச் பேனாவை எடுத்தான்.
சுவரின்
அருகில் சென்று அதில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் ஏதோ எழுத ஆரம்பித்தான். அவன்
கெட்ட நேரமோ என்னவோ, நகரைச் சுற்றி வந்தவர்கள் அவனைப் பார்த்துவிட்டனர்.
ஐயாக்கண்ணுவின் செயலால் கோபம் கொண்டு, நமது தலைவரை இந்தப் சின்ன பையன், அதுவும்
அந்தச் சாதிக்காரப்பயன் அவமானமாக எழுதிக்கொண்டிருக்கிறானே என்று அவனைப் பிடித்து,
அடித்துவிட்டார்கள். அத்தோடு விடாமல் அவனை அப்படியே தூக்கிக் கொண்டு விழா ஏற்பாடு
செய்கிற பெரிய மனிதர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஐயாக்கண்ணுவுக்கு
முகத்தில் ரத்தம் கொட்டியது. உதடு லேசாக கிழிந்திருந்தது. அவனால் எதுவும் பேச
முடியவில்லை. வேட்டியை மடித்துக் கொண்டு வெளியே வந்த பெரியவர் என்ன நடந்தது? யார்
இந்தப் பையன் ஏதேனும் வாகனத்தில் அடிபட்டு விட்டானா என கேள்விகளை அடுக்கிக் கொண்டே
வேகமாக அருகே வந்தார். ஐயா இவன் மேல்படி சாதிக்காரப்ப பயன். நம் ஐயா படத்தை
சுவரில் ஒட்டியிருந்தோம். அந்தப்படத்திற்கு கீழே இவன் ஏதேதோ எழுதிக்
கொண்டிருந்தான். அதான் அடித்து தூக்கிட்டு வந்துட்டோம் என்றனர். இவனை அங்கேயே
கொன்று போட்டிருப்போம். சின்னப் பயனாக இருந்ததால் இங்க தூக்கிட்டு வந்துட்டோம்.
இப்ப சொல்லுங்கய்யா இவன என்ன செய்யனும்.
பெரியவர்
அந்த பையனைப் பார்த்து டேய் உன் பெயர் என்னடா? ஐயாக்கண்ணு வாயத்திறந்து பேச
முற்பட்டான். ஆனால், வாயைத் திறந்ததால் அதிகமாக ரத்தம் கொட்டி வலி அதிகமானதால்
அவனால் பேசமுடியவில்லை. சுவரொட்டி மேல என்னடா எழுதின? சொல்லு என்று கேட்டார்.
ஆனால், ஐயாக்கண்ணுவிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை என்று சொல்வதை விட, பயமும்
வலியும் சேர்ந்ததால் அவனால் பேச முடியவில்லை என்றுதான் கூற வேண்டும். டேய் அவன்
வாய்த்திறக்க மாட்டேங்கிறான். நீங்க சொல்லுங்க. இவன் சுவரொட்டி மேல என்ன எழுதியிருக்கான்?
என்று கேட்டார்.
அதெல்லாம்
நாங்க பாக்கவில்லை ஐயா. பார்த்தாலும் எங்களுக்குப் படிக்கத் தெரியாது. ஆனால்,
இவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் நம்ம தலைவர் படத்துக்குக் கீழ எழுதுவான். இவனை
சும்மா விடக்கூடாது ஐயா. இந்த வயசில் இவனுக்கு இவ்வளவு தைரியம் இருந்தா பெரியவனா
ஆனப் பிறகு எவ்வளவு தைரியம் இருக்கும். இவனை கண்டித்தால் தான் இவன் சாதிக்காரப்
பசங்களுக்கும் பயம் வரும். நம்மகிட்ட மோதினா என்ன நடக்கும்னனு காட்டனும் ஐயா,
என்று ஆவேசப்பட்டான் ஒருத்தன்.
பெரியவர்
வீட்டுக்குள் இருந்த தனது மகனைக் கூப்பிட்டார். டேய் பெரியசாமி, இந்தப் பைக்கில்
சென்று சுவரொட்டியில் என்ன எழுதியிருக்கான்னு பாத்துட்டு, அத உன்னுடைய செல்போன்ல
ஒரு போட்டோ எடுத்து வருமாறு கூறினார். டேய் உங்கள்ல ஒருத்தன் பெரியசாமி கூட போங்க.
போய் அந்த இடத்தைக் காட்டுங்க என்று கூறி அனுப்பி வைத்தார்.
பெரியவர்
மகன் பெரியசாமி கல்லூரி படிப்பை முடித்திருந்தான். தனது பைக்கை ஸ்டார்ட்
செய்துவிட்டு அவர்களில் ஒருவனை பின்னால் ஏற்றிக் கொண்டான். ஐயாக்கண்ணுவைப்
பார்த்தான். அவன் ஒரு தூணுக்கு அருகில் தூணோடு சேர்ந்து கட்டி வைத்திருந்தார்கள்.
அங்கங்கு ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. வலியால் முனகிக் கொண்டிருந்தான். விபரம்
கேட்டுத் தெரிந்து கொண்டு வேகமாம பைக்கைக் ஓட்டிச் சென்றான்.
சில
நிமிடங்களில் திரும்பி வந்த பெரியசாமி செல்போனில் படம் பிடித்ததைத் தந்தையிடம்
காட்டினான். தலைவரின் படத்துக்குக் கீழே எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்ந்தே
போனார். அந்த நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் வரதராஜனிடமிருந்து பெரியவருக்குப்
போன் வந்தது. எடுத்து வணக்கம் சொல்லி நலம் விசாரித்தார். வரதராஜனோ ஐயா நாளை சிலை
திறப்பு விழாவிற்கு என்னால் வரமுடியாது. காவிரி நீர் பிரச்சனைக்காக அவசரகால
கூட்டமாக நாளை சட்டமன்றம் கூடுகிறது. அதனால் நான் அன்றே சென்னை கிளம்புகிறேன்.
அதனால்
வேறு யாரையாவது வைத்து சிலையைத் திறங்கள் அல்லது விழாவைத் தள்ளி வையுங்கள் என்று
சொல்லி விட்டு போனைக் வைத்துவிட்டாh. பெரியவர் முகத்தில் வருத்தம் தெரிந்தது.
முகம் களையிழந்து காணப்பட்டது. மகன் பெரியசாமி, அப்பாவைப் பார்த்து, அப்பா இப்ப
என்ன செய்வது அவசரப்பட்டு அந்தப் பையனை அடித்துக் காயப்படுத்தி விட்டார்களே!
வெளியில் தெரிந்தால் பிரச்சனை பெரியதாகிவிடும் என்றான். பள்ளிக்கூடம் முடிந்து
இன்னும் வீட்டுக்கு வராததனால் ஐயாக்கண்ணுவின் நண்பர்களிடமும், அவன் வகுப்பு
மாணவர்களிடமும் அவனது பெற்றோர்கள் விசாரித்துக் கொண்டிருந்தனர். ஐயாக்கண்ணுவின்
பெற்றோர் சரியான தெளிவான பதில் கிடைக்காததால் பதட்டத்துடன் உறவினர்களின்
வீடுகளிலும் விசாரிக்க தொடங்கினர்.
ஒவ்வொருவரும்
ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தார்கள். ஒருவர் சொன்னார் எங்கேயாவது விளையாடப்
போயிருப்பானோ? இன்னொருத்தர், விளையாடப் போயிருந்தால் அவன் கூடச் சேர்ந்தவனும்
போயிருப்பானே. காட்டு மரத்தில் நாவல் பழம் பறிக்கப் போயிருப்பான் என்றார்கள்.
ஐயாக்கண்ணுக்கு வீட்டிற்கே மருத்துவர் வந்து மருத்துவம் பார்க்கிறார். பெரியவர்
பக்கத்தில இருக்கிறார். அடித்து இழுத்து வந்தவர்களைப் பார்த்து முட்டாள் பயல்களா,
சின்னப் பையனா இப்படியாடா போட்டு அடிக்கிறது. அறிவில்... சிறுவனிடம் மன்னிப்பு
கேளுங்கடா என்று கோபமாகக் கூறினார். அடித்தவர்கள் ஐயாக்கண்ணுவிடம் மன்னிப்பு
கேட்டனர். ஊசி போட்டதால் ஐயாக்கண்ணுக்கு வலி குறைந்திருந்தது.
வலிக்குதாப்பா...
இந்தா ஆரஞ்சு ஜுஸ் குடி என்று குடிக்கக் கொடுத்தார் பெரியவர். ஏம்பா தம்பி ஏன்
அப்படி எழுதின உனக்கு அவரைப் பிடிக்குமா என்று பெரியவர் கேட்க, ஆமாம் ஐயா அவரை
எனக்கு ரொம்ப பிடிக்கும். எங்க தமிழ் புத்தகத்தில அவரைப் பற்றி பாடம் இருக்கு...
எங்க தமிழ் சார் அவரைப் பற்றி பெருமையாகப் பேசினார். ஏழைகளுக்கு இரக்கம்
காட்டினார் என்றும், நாட்டு விடுதலைக்காக போராடினார் என்றும் சொன்னார்.
அதுமட்டுமல்ல மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஏழை எளிய
மக்களோடு தான் அதிக தொடர்பும், அவர்களுக்காகவே வாழ்ந்து, அவர்களுக்கே தனது
சொத்துக்களையெல்லாம் எழுதியும் வைத்தாராம்.
அதனால்
தான் அவரது படத்திற்கு கீழே 'மக்களே இவரைப் போல் தர்மம் செய்யுங்கள்" என்று
எழுதினேன். அப்போது தான் இவங்க என்னை அடிச்சி தூக்கிட்டு வந்தாங்க. சரி நான் இப்போ
வீட்டுக்கு போகனும். அப்பா, அம்மா என்னைத் தேடுவாங்க. நீ தனியா போக வேண்டாம், நானே
கொண்டு போயி உங்க வீட்டில் விடுகிறேன். வா போகலாம். டிரைவர் காரை எடுத்துட்;டு வா
என்றார். ஐயா வேணாங்கய்யா. அங்க போன ஏதாவது பிரச்சனை ஆகிடும். பையனை அடிச்சது
தெரிஞ்சா ஊரே சேர்ந்து நம்மை தொலைச்சிடுவாங்க என்றான், ஒருவன். நீ சொல்றதும்
சரிதான். தப்பு நம்ம மேல இருக்கு. ஐயா நீங்க கவலைப்படாதீங்க. ஐயாக்கண்ணு
குறுக்கிட்டான். தப்புன்னு உணர்ந்தவங்கள தண்டிக்கிறது மகாபாவம். நான் ரோட்ல நடந்து
வரும் போது சறுக்கி பள்ளத்தில விழுந்திட்டேன், இவங்க தான் எனக்கு உதவி செய்தாங்க
என்று சொல்லி சமாளிச்சிடுறேன்.
சிறு
பையன் ஐயாக்கண்ணு பேசியதைக் கேட்டதும் எல்லோரும் சிறிது நேரம் மௌனமானார்கள். அவனது
உயர்ந்த உள்ளம் அனைவரையும் திகைக்க வைத்தது. பெரியவர் மௌனத்தை கலைத்தார். தம்பி
நாளை நடக்கவிருக்கிற சிலை திறப்பு விழாவுக்கு நீங்க தான் தலைவர். நீங்க தான்
சிலையை திறந்து வைக்க வேண்டும். டேய் முட்;டாப் பசங்களா நம்ம சமுதாயம் மிகவும்
நேசிக்கிற, நம்ம தலைவர் சிலையை, உண்மையாக கபடமில்லாத வேறு சமுதாயத்தைச் சார்ந்த
இந்த ஐயாக்கண்ணு திறந்து வைப்பதுதான் அவருக்கும், நமக்கும் பெருமை. சிலை திறப்பவர்
ஐயாக்கண்ணுன்னு போஸ்டர் அடிச்சு நட்டுங்கடா, என்று பெரியவர் உத்தரவிட்டார்.
கதையை
தொகுத்தவர்,
அகஸ்டியன்
ஆசிரியர்,
தென்காசி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக