Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 செப்டம்பர், 2019

சிதம்பர ரகசியங்கள்

 Image result for சிதம்பர ரகசியங்கள்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சிதம்பரத்தில் எல்லோரும் அறியத்துடிக்கும் மர்மம். அப்படி என்ன ரகசியம் இருக்கு அந்த கோவில், அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சரியங்களின் சில தகவல்கள் மட்டுமல்லாமல் இவற்றை எல்லாம் தாண்டி அக்கோவில் ஏதோ சிறப்பு வாய்ந்த சக்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள்தான்......!

பூமத்திய ரேகையின் மையம் :

ஒட்டுமொத்த உலகத்தின் மையப்புள்ளி இருக்கும் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி இடத்தில் அமைந்துள்ளது.

உச்சகட்ட அதிசயம் :

பஞ்ச பூத கோவி;களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 னுநபசநநள, 41 அiரெவநள நுயளவ தீர்க்க ரேகையில் (டுழுNபுஐவுருவுநு) அமைந்துள்ளது.

மனித தோற்றம் :

மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

மூச்சுக்காற்றை குறிக்கிறது :

விமானத்தின்மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு செய்யபட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15ழூ60ழூ24 ஸ்ரீ 21,600).

நாடிகள் :

இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

ஐந்து படிகள் :

பொன்னம்பலம் சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை பஞ்சாட்சர படி என்று அழைக்கப்படுகின்றது, அதாவது சி,வா,ய,ந,ம என்ற ஐந்து எழுத்தே அது.

4 வேதங்கள் :

கனகசபை பிற கோவில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனகசபையை தாங்க 4 தூண்கள் உள்ளன, இது 4 வேதங்களை குறிக்கின்றது.

ஆயக்கலைகள் :

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64   64 மேற் பலகைகளை கொண்டுள்ளது, இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள், மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.

பொற் கூரை :

பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

தாண்டவம் :

சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலத்தில் கால் பெருவிரல் இருப்பது பூமியின் ஈர்ப்பு மையத்தில் உள்ளது.

தீர்த்தங்கள் :

சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகிய தீர்த்தங்கள் கோவிலில் அமைந்துள்ளன.

கோபுரங்கள் :

இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக