Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 16 செப்டம்பர், 2019

ஆடும், ஓநாயும்..!

 Image result for ஆடும், ஓநாயும்..!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



குழந்தைகள் ஒரு குழுவாக விளையாடும்போது அவர்களுக்கு நல்ல ஒற்றுமையும், மற்றவர்களை பற்றி புரிந்துக்கொள்ளும் மனப்பான்மையும் உண்டாகிறது.

இன்றைய காலங்களில் குழந்தைகளின் கைகளுக்குள்ளேயே அனைத்து விளையாட்டுகளும் அடங்கியுள்ளதால் கிராமப்புறங்களில் விளையாடும் விளையாட்டுகளை மறந்து இருப்பார்கள்.

அவ்வாறு கிராமப்புறங்களில் குழந்தைகள் குதூகலமாக விளையாடும் விளையாட்டுக்களான ஆடும், ஓநாயும் விளையாட்டை பற்றி பார்க்கலாம்.

எத்தனை பேர் விளையாடுவார்கள்?

எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.

விளையாட்டில் முக்கியமானவர் :

ஆடும், ஓநாயும்.

எப்படி விளையாடுவது?

முதலில் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன்பு ஆடு மற்றும் ஓநாயாக விளையாடும் நபர்களை தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் விளையாடும் போட்டியாளர்களில் தலைவராக ஒருவர் இருப்பார். அவர்தான் ஓநாய் ஆவார். மீதமுள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஆடாக இருக்க வேண்டும்.

இவ்வாறு தேர்வு செய்தபின் ஓநாயாக இருக்கும் தலைவர் ஆடாக இருக்கும் நபர்களை துரத்தி செல்ல வேண்டும். அப்போது ஓநாயிடம் பிடிபடாமல் ஆடுகளாக இருக்கும் நபர்கள் ஓட வேண்டும்.

ஓநாய் ஒருவேளை ஆடாக இருக்கும் நபர்களை பிடித்துவிட்டால், அவர் ஓநாயின் இடுப்பை பின்னால் பிடித்துக் கொண்டு ஓநாயுடன் சேர்ந்து ஓட வேண்டும்.

இதேபோல் ஆடாக பிடிப்பட்ட நபர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஓநாய் இடுப்பை பிடித்துக்கொண்டு, இடையில் அறுபடாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இடையில் எந்த நபர் அறுபட்டு விடுகிறாரோ அவர் அவுட் ஆகி ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.

பின்பு ஆட்டத்தில் இருக்கும் மீதமுள்ள நபர்கள் அறுபடாமல் இவ்வாறு ஓநாயின் இடுப்புப்பகுதியை பிடித்துக் கொண்டு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

கடைசியாக எந்த நபர் பிடிப்பிலிருந்து அறுபடாமல் ஓடிக்கொண்டே இருக்கிறாரோ அவர்தான் இந்த விளையாட்டின் வெற்றியாளர் ஆவார்.

பலன்கள் :

 இலக்கை நிர்ணயிக்கும் திறன் மேம்படும்.

 புத்துணர்ச்சியும், உற்சாகத்தையும் தரும்.

பலம் அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!