Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 செப்டம்பர், 2019

நூறு சதவீதம்!


 Image result for நூறு சதவீதம்!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

மாவட்டத்தில் சிறந்த பள்ளி என்ற பெயர் பெற்ற பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்று. பல ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முழுத் தேர்ச்சி பெற்று தன்னை உயர்ந்த இடத்தில் நிறுத்தி தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நல்ல மரியாதையும், உண்மையாக உழைக்கும் ஆசிரியர்கள் என்ற புகழும் இருந்தது. அப்படிப்பட்டப் பள்ளியில்தான் இன்று விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற இருக்கின்றது.

அமைச்சர் கேசவன் அழைக்கபட்டிருக்கிறார். அமைச்சரே நேரில் வந்து சைக்கிள் வழங்க வருகிறார் என்றால் சாதாரண காரியமா? அவரை வரவேற்க நிர்வாகமும், ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களை மட்டுமல்ல பள்ளியையும் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பள்ளியின் நுழைவு வாயிலில் வாழை மரம் நட்டியும்,மாவிலை தோரணம் கட்டியும் அளவும், அழகும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் சில மாணவர்கள்.

விழா நடைபெறும் மேடையை வண்ண வண்ணத் துணிகளால் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார்கள். சில மாணவர்கள் மேடைக்கு முன்பாக வண்ணத்தாள்களை வெட்டியும், ஒட்டியும், கட்டியும் வளாகத்தை அழகுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஆசிரியர்களோடு இணைந்து மாணவர்கள் அழகுபடுத்தும் பணியில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஒலிபெருக்கி அமைப்பாளர்கள் ஸ்பீக்கர்களைக் கட்டியும் மைக்கை டெஸ்ட் செய்வதுமாக அவர்களது பணியை கவனமாகச் செய்து கொண்டிருக்கின்றனர்.

முத்தாய்ப்பாக கட்சித் தொண்டர்கள் அமைச்சர் கேசவனின் கட்டவுட்களை சாலையில் இரு புறங்களிலும் வரிசையாகக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். எத்திசை நோக்கினும் அமைச்சர் கேசவன் வெள்ளை வேட்டி சட்டையின் கும்பிட்டவாறு உள்ள போஸ்டர்கள், பெரிய பெரிய கட்டவுட்டகளில் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் அமைச்சர் கேசவன் ஒரு தொண்டனாக மூத்த அமைச்சர்களுக்கு கட்டவுட்டகள் வைத்து தனது விசுவாசத்தைக் காட்டினார். அப்போது கேசவனோடு சேர்ந்து கட்டவுட் வைத்த சில கிளைக் கழக பொருப்பாளர்கள் இன்றும் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். அதைவிட உயர்ந்த பொறுப்பு இதுவரை கிட்டவில்லை. ஆனால் இந்த கேசவனுக்கு மட்டும் எப்படி தேர்தலில் சீட் கிடைத்ததோ தெரியவில்லை உடன் உழைத்த தொண்டர்களுக்கு. ஆனால் கேசவன் மூத்த அமைச்சர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, காலைத் தொட்டுக் கும்பிட்டு கண்களில் ஒற்றிக் கொள்வார் என்று உடன் உழைத்த மானஸ்த தொண்டர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

அரசியல் வாழ்க்கை, காற்றில் உயரே பறக்கும் பட்டம் போன்றது. அது உயர உயர பறக்கும். ஆனால் எப்போது அறுந்து விழும் என்று யாருக்கும் தெரியாது.

ஒரு முறை கேசவனின் மனைவி கேட்டாள், ஏங்க போயும் போயும் கால்ல விழுந்து கும்பிடுறியளே இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று அடியே நான் இன்றைக்கு ஒரு சாதரண தொண்டன் நிமிர்ந்து நின்னா கடைசி வரைக்கும் தொண்டானத்தான் இருக்க முடியும். எவ்வளவுக் கெவ்வளவு குனியுரோமோ அவ்வளவுக்கு அவ்வளவு உயர முடியும். இதெல்லாம் உனக்கு புரியாது.

விழா நேரம் நெருக்கிக் கொண்டிருக்கிறது. அமைச்சர் கேசவன் தனது வெளிநாட்டு சொகுசுக் காரில் மாவட்ட செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் வருகிறார்.

விழா ஏற்பாடுகள் எல்லாம் எப்படி இருக்கிறது மாவட்டம். கூட்டம் கூடுமில்ல. கட்சித் தொண்டர்கள் களப்பணி எப்படிப் போய்கிட்டு இருக்கு. ஏன்னா இது நான் படித்த பள்ளி.

தலைவர ஏற்பாடுகள் எல்லாம் பக்காவா நடந்துகிட்டு இருக்கு. பேனர், கட்சிக்கொடின்னு தொண்டர்கள் அமர்களப்படுத்திட்டுருக்காங்க. ஒன்றியச் செயலாளரைக் கூடவே நின்னு பார்த்துக்கோன்னு சொல்லியிருக்கேன்.

ஓயா மாவட்டம், நான் இந்தப் பள்ளிக்கூடத்தில படிக்கும் போது நடந்த சம்பவங்களையெல்லாம் பேசனும்ன்னு நினைச்சிறுக்கேன். அப்போ இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் யாரும் இப்ப பணியில இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். அவங்களப் பாக்கனும்ன்னு ஆசையா இருக்கு.

அமைச்சர் கேசவனை வரவேற்பதற்காகக் கட்சித் தொண்டர்கள் கரை வேட்டி வெள்ளை சட்டையுடன் வெண்மேகம் தரையில தவழ்வதைப் போல் இருந்தது. கேரளத்து செண்டை மேளம் கலைஞர்களை குத்தாட்டம் போட வைத்தது.

மாணவியர் சீருடையில் வரிசையாக நின்று மலர் தூவி அமைச்சரை அழைத்து வர நின்றது. சாலையோரத்தில் வரிசையாக நிற்கும் அசோக மரத்தை நினைவுப்படுத்தியது.

மேடையின் முன்பாக முதலில் மாணவ மாணவியரும் அவர்களுக்குப் பின்புறமாக் கட்டப்பட்டிருந்த கயிற்றுக்கு அடுத்தபடியாக மக்களும் அமர்ந்திருந்தனர்.

அமைச்சரின் காரும் அவருடன் வந்த பத்து பதினைந்து கார்களும் ஹாரன் அடித்துக் கொண்டு வேகமாக வந்ததும், சென்டை மேளச் சத்தத்தையே தோற்கடித்துவிட்டது என்றால் பாருங்களேன்.

அமைச்சரின் கார் பள்ளியருகே வந்துவிட்டது. அவர் காரைவிட்டு இறங்குவதற்குள் தலைமை ஆசிரியர் மாலையோடு அருகில் சென்றார். தலைமை ஆசிரியர் கேசவனுக்கு ரோஜாப்பூ மலையை அணிவித்து அழைத்து வர, இருபுறமும் வரிசையாக சீருடையில் நின்ற மாணவியர் மலர் தூவி மேடை வரை அழைத்து சென்றனர்.

பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் கட்சிப் பிரமுகர்களுடன் நாயாமாக அமைச்சர் கேசவன் நிற்க தமிழ்தாய் வாழ்த்துப் பாடப்பட்டது. தாளாளர் வரNவுற்று பேசினார். அதுமட்டுமல்ல வாழ்த்தியும் பேசினார்.

அமைச்சர் கேசவன் எங்கள் பள்ளியில் பயின்றார் என்பது எங்களுக்கும் பெருமை. கிட்டதட்ட இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அவர் இப்பள்ளியில் படிக்கும் போது சிறந்த மாணவனாக ஒழுக்க சீலராக இருந்தார். படிப்பதில் படுசுட்டி.

அமைச்சர் கேசவன் மிகக்கவனமாகக் கேட்கிறார் பேசுவதை படிப்பில் மட்டுமா சுட்டியாக இருந்தார் விளையாட்டிலும்தான். மற்ற மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர். மாணவர்கள் இவரிடம் தான் கேட்டுப் படிப்பார்கள், அதுவும் கணக்குப் பாடத்திலே புலி.

அமைச்சர் கேசவன் அருகில் இருந்த மாவட்ட செயலாளர் கைகொடுத்து வாழ்த்தினார். இதையெல்லாம் நீங்க இதுவரைச் சொல்லவேயில்ல.

நல்லாக் கவனிங்க. இன்னும் நிறைய சொல்லுவாங்க. இவங்க எதையாவது சொல்ல மறந்திருந்தாங்கன்னா அதை நான் சொல்றேன்.

அப்படிப்பட்ட ஒரு சிறந்த மாணவனை உருவாக்கி தமிழகத்திற்கு திறமை வாய்ந்த ஒரு அமைச்சரை தந்;தப் பள்ளி எம்பள்ளி என்று கூறிக் கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நன்றி வணக்கம் என்று தனது உரையை நிறைவு செய்து கொண்டு, அமைச்சருடன் மீண்டும் கைகுலுக்கி கொண்டு அருகில் அமர்ந்தார்.

அடுத்ததாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உரையாற்ற அழைக்கப்பட்டார் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஆசிரியரால்,

தலைமை ஆசிரியர் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு உரையைத் தொடங்கினார். மாண்புமிகு அமைச்சர் கேசவனை பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் ஒரு சிறந்த, தன்னலமற்ற சேவையை இந்த நாட்டுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் அவரை மாண்புமிகு மாணவனாக வளர்த்து மாண்புமிகு அமைச்சராக தமிழகத்திற்கு தந்ததினால் இன்று எம் பள்ளி தலை நமிர்ந்து நிற்கிறது.

பேசி கொண்டிருக்கும் போது மைக் அடிக்கடி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டது. வெட்கப்பட்டு தலையை குனிந்து, நிற்கும் குறைந்த மதிப்பெண் வாங்கி வந்த குழந்தையின் நாடியைப் பிடித்து தலையை நிமிர்த்தி தைரியமூட்டும் தாயைப் போல மைக்கை அவ்வப்போது நிமிர்த்தி பிடித்துக் கொண்டு பேச்சை அளந்துவிட்டார்கள்.

அமைச்சர் கேசவன் பள்ளியிலே படிக்கிற போது இங்கு பணிபுரிந்த ஆசிரியர்கள் ஒன்றிரண்டு பேர்தான் இப்போதும் பணிபுரிகிறார்கள் மற்றவர்களெல்லாம் பணி ஓய்வு பெற்றுவிட்டார்கள். நமது அமைச்சருக்கு வகுப்பாசிரியராக இருந்த திரு.முத்தப்பன் அவர்களை இவ்விழாவிற்கு அழைத்துதிருந்தோம். ஆனால் ஏனோ இன்று அவர் இங்கு வரவில்லை. வெளியூர் பயணம் மேற்கொண்டாரோ? சுகமில்லையோ? என்னவென்று தெரியவில்லை. அவர் வந்து நமது அமைச்சரைப் பற்றி அவரது அனுபவங்களிலிருந்து பேசினால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.

அமைச்சர் கேசவன் நிமிர்ந்து பெருமூச்சி விட்டுக்கொண்டு ஆசனத்தில் வசதியாக அமர்ந்துக்கொண்டார்.

தொடர்ந்து தலைமை ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து கேட்டுக் கொண்டது, அன்பார்ந்த மாணவச் செல்வங்களே நீங்களும் அமைச்சர் கேசவனைப் போல நன்கு படித்து இந்தப் பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும். வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்து நாட்டையும் வீட்டையும் உயர்த்த வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

இப்போது நாம் ஆவலோடு எதிர்பார்த்திருந்த அமைச்சர் கேசவன் அவர்கள் மாணவர்களுக்கு இலவச நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுவார்கள், என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் உற்சாகமாக படபடக்க கட்சித் தொண்டர்கள் கரகோசம் எழுப்பினர்.

அமைச்சர் கேசவன் அணிந்திருந்த வெள்ளை வேட்டி சட்டைக்கும், அவர் நிறத்திற்கும் எடுப்பாக இருந்தது. கையில கோல்ட் வாட்ச் பளிச்சென்றுருந்தது. வந்திருப்பவர்களுக்கு அரசியல் வாதிக்கே உரித்தான பாணியில் வணக்கம் சொல்லி முடிப்பதற்கே பத்து நிமிடம் ஆகிவிட்டது. மாவட்டத்திலிருந்து கிளைக் கழகத் தொண்டர் வரைக்கும் பதவியும் பெயரும் சொல்ல வேண்டும். இது தான் அரசியல்வாதிகளின் எழுதாத சட்டம், மரபு. அன்பார்ந்த மாணவர்களே நான் உங்களைப் போன்று இந்தப் பள்ளியிலே படிக்கும் போது நடந்த சம்பவங்களை பேச வேண்டும் என நினைத்திருந்தேன்.ஆனால் நான் எதுவும் பேச முடியாத அளவுக்கு இங்கு என்னை பற்றி பேசிவிட்டார்கள். அதனால் இன்று நான் இப்பள்ளியின் மாணவனாகவே மாறிவிட்டேன்.

இப்பள்ளியின் பெருமைக்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன் என்பது உண்மைதான். என்னால்தான் இந்தப் பள்ளி நூறு சதவீத தேர்ச்சி பெற்றது அன்று. அது தொடர்ந்து இன்றும் நூறு சதவீத வெற்றி பெருகிறது என்றால் என் போன்ற மாணவர்களின் உழைப்பும் தியாகமும்தான்.

நீங்கள் நன்கு படித்து அதிக மதிப்பெண் பெறுங்கள் அது உங்கள் பெற்றோருக்கு மகிழ்ச்சி. நல்ல மாணவன் என்று பெயரெடுங்கள் அது உங்கள் ஆசிரியருக்கு மகிழ்ச்சி. தன்னலமற்ற தொண்டு செய்யுங்கள் அது நாட்டுக்கே மகிழ்ச்சி.

ஆசிரியர் முத்தப்பன் அன்று எனக்கு வகுப்பாசியராக இருந்தார். அவரைப் பார்க்க ஆசையாக இருக்கிறது.

பள்ளி வளாகத்திற்கு வெளியே கூம்பு வடிவ ஒலிபெருக்கி ஆங்காங்கு கட்டியிருந்தார்கள். சாலையோரத்தில் கொஞ்சம் இருட்டான பகுதியில், கட்டப்பட்டிருந்த ஒலி பெருக்கி அருகில் தலைப்பாகையுடன், சால்வையால் மூடிக்கொண்டு அமைச்சர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த உருவம் சற்று திடுக்கிட்டது. உடனே தான் வந்த சைக்கிளை எடுத்தக் கொண்டு மேலும் அங்கு நிற்காமல் கிளம்பிவிட்டது. யாரும் தன்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்வதில் உறுதியாக இருந்தது.

தன்னை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணிக் கொண்டு சைக்கிளில் சென்றாலும், சைக்கிளில் இருந்து வந்த பிரிவீல் சத்தமானது, ஆசிரியர் முத்தப்பன் செல்கிறார் என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது.

அமைச்சர் கேசவன் தெடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். தான் படித்த பள்ளிக்கூடம் என்பதால் அமைச்சர் சுவார்யமான வியங்களையெல்லாம் பேசுவார் என்று கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது மாணவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அமைச்சர் சுருக்கமாக தனது உரையை முடித்துக் கொண்டு இலவச சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கிவிட்டு விரைவாக கிளம்புவதில் ஆர்வமாக இருந்தார்.

விழாவை முடித்துக் கொண்டு காரில் ஏறிய அமைச்சர், டிரைவரிடம் சொன்னார், ஆசிரியர் முத்தப்பன் வீட்டு விலாசம் கேட்டு விசாரித்து அவருடைய வீட்டுக்குப் போ என்றதும் டிரைவர் விலாசம் விசாரித்து வீட்டிற்கே சென்றுவிட்டார் பத்து நிமிடத்தில்.

அப்போது தான் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு செம்புத் தண்ணீரை குடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் முத்தப்பன்.

தனது வீட்டு முன் கார் வந்து நிற்பதையும், காரில் இருந்து தனது முன்னாள் மாணவன் இன்னாள் அமைச்சர் தனது சகாக்களுடனும், மாவட்ட செயலாளருடனும் இறங்கி தனது வீட்டிற்க்குள் வருவதைப் பார்த்து அதிர்ந்தே விட்டார்.

சார் எப்படி இருக்கீங்க. நல்லா இருக்கீங்களா? என்று கேட்டுக் கொண்டே தார்சாவில் வந்து நின்றார் அமைச்சர்.

ஐயா… வணக்கம் என்ற அசிரியர் முத்தப்பனின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை, மாறாக கொஞ்சம் பயமும், பதற்றமும் இருந்தது.

ஆசிரியர் முத்தப்பனின் மனைவி அமைச்சருக்கு வணக்கம் சொல்லி சிரித்த முகத்தோடு, பெருமை பொங்க வரவேற்றார். ஐயா எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்களே? என்று ஐயம் மேலிட இழுத்தார்.

நானாக வரலம்மா. எனது முன்னாள் ஆசிரியர் என்னை இங்கு வரவைத்துவிட்டார். எனக்கு பாடம் சொல்லி கொடுத்தவர் அல்லவா. அதுவும் விழாவிற்கு தலைமை ஆசிரியரும், நிர்வாகமும் அழைத்திருந்தும் வரவில்லை இல்லையா. அதனால்தான் நேரில் சென்று ஆசிரியரிடம் வாழ்த்துப் பெறுவதற்காக வந்தேன்.

அமைச்சருடன் வந்தவர்களையெல்லாம் வரண்டாவில் அமர வைத்துவிட்டு அமைச்சர் மட்டும் ஆசிரியருடன் அறைக்குள் இருந்து பழைய கதைகளைப் பேச ஆரம்பித்தார்.

ஆசிரியர் முத்தப்பன் கை கூப்பியப்படி ஐயா என்னை நீங்க மன்னிக்கனும். நான் ஒரு நல்ல ஆசிரியராக இல்லை என்பது உங்களுக்கு தெரியும். நான் அன்று உங்களுக்கு செய்த காரியத்திற்கு நான் இன்று வேதனையின் உச்சத்திற்கு சென்றுவிட்டேன். நான் அன்று செய்த மிகப் பெரிய தவறு தான் இன்றைய விழாவிற்கு நான் வராததற்குக் காரணம்.

ஐயா நீங்க முதலில் என்னை ஐயா என்று அழைப்பதையும், ஒரு அரசியல்வாதியாகப் பார்ப்பதையும் நிறுத்துங்க. என்னை உங்களுடைய மாணவன் கேசவனாகவேப் பாருங்கள். என்னை கேசவன் என்றே அழையுங்கள்.

எப்படிய்யா முடியும். நான் செய்தது சாதாரண தவறா. பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உங்களை அனுமதித்தால் ரிசல்ட் பாதிக்கும். கேசவன் பெயிலாகி விடுவான். ஸ்கூலுக்கு சென்ட்றம் ரிசல்ட் கிடைக்காது என்று முடிவு செய்து உங்களை பள்ளியிலிருந்து மனசாட்சி இல்லாமல் நீக்கிவிட்டோம். அப்போது உங்க அம்மா எவ்வளவோ கெஞ்சியும் தேர்வு எழுத அனுமதிக்காமல், வலுக்கட்டாயமாக சர்டிபிகட்டை கொடுத்தோம். நீங்கள் அன்று தேர்வு எழுத முடியவில்லையே என்று ஏமாற்றத்தோடு உங்கள் அம்மா அப்பாவோடு வெளியேறியது இப்போது எனக்கு வலி கொடுக்குது.

ஐயா இன்றைக்கும் பள்ளியின் நிர்வாகியும், தலைமை ஆசிரியரும் விழாவில் பேசியது உங்களுக்குத் தெரியாதே?

தெரியும்மய்யா… நான் சாலையில் ஓரமாக இருட்டில் நின்று கேட்டுக் கொண்டிருந்தேன். கேட்டீங்களா… நான் அன்று பத்தாம் வகுப்பு படிக்கும் போது, பொதுத் தேர்வு எழுதினால் என்னால் பள்ளிக்கு நூறு சதவீத தேர்ச்சி கிடைக்காது என்று துரத்திய பள்ளி, இன்று என்னை மாணவர்களுக்கு முன்மாதிரியாக அடையாளம் காட்டுகிறது. நான் படித்தப்பள்ளி என்று மனநிறைவோடு விழாவிற்கு வந்தேன். ஆனால் வெறுமையாக வெளியே வந்தேன் அன்று போல்.

கதையை தொகுத்தவர்,
அகஸ்டியன் ஆசிரியர்,
தென்காசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக