இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
வடுவூர்
பறவைகள் சரணாலயம் திருவாரூரிலிருந்து ஏறத்தாழ 44கி.மீ தொலைவிலும்,
தஞ்சாவூரிலிருந்து ஏறத்தாழ 24கி.மீ தொலைவிலும், மன்னார்குடியிலிருந்து ஏறத்தாழ
16கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும்
நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இடம்தான் வடுவூர்.
பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அழகிய ஏரி,
நடுவே கருவேள், கொடுக்காப்புளி மற்றும் நீர்க்கடம்பு என பலவகையான மரங்கள் இங்கு
பறவைகளுக்கு இளைப்பாற இடம் தருகின்றன.
இங்கு பார்வையாளர்கள் பறவைகள் ரசிப்பது
மட்டுமின்றி அவற்றின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள மரம் நெடுகிலும், பறவைகளின்
படம், பெயர், வாழ்விடம், வருகை என எல்லாவற்றையும் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
ஏரியை
சுற்றிப் பார்க்க சிமெண்ட் கட்டைகளால் பாதை அமைக்கப்பட்டிருக்க, சுற்றிலும்
வளர்ந்திருக்கும் மரங்கள் நிழற்குடை விரிக்க, பைனாகுலர் உதவியோடு பறவைகளை அருகில்
பார்க்கலாம்.
பல நாடுகளிலிருந்து இங்கு பறவைகள் அதிகம் வருகை
தருகின்றன. அதனால் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாக உள்ளது.
உணவு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கம்
ஆகியவற்றிற்கான பொருத்தமான சூழலை வழங்கும் இந்த இடம் பறவைகளுக்கு மிக ஏற்றதாக
உள்ளது.
இப்பகுதியின் விவசாயிகள் புலம்பெயர்ந்த பறவையின்
வருகையை நேசிக்கிறார்கள். குழந்தைகளுடன் இவ்விடத்திற்கு செல்வதற்கு ஏற்ற இடமாகும்.
எப்படி செல்வது?
திருவாரூரிற்கு
அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. திருவாரூரிலிருந்து
வடுவூர் பறவைகள் சரணாலயத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளது.
மேலும்
தஞ்சாவூரிலிருந்து பேருந்து அல்லது வாடகை வாகனங்களின் மூலம் வடுவூருக்கு
செல்லலாம். அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் ரயில் மற்றும் பேருந்து வசதிகள்
தஞ்சாவூருக்கு உள்ளன.
எங்கு தங்குவது?
திருவாரூர்
மற்றும் தஞ்சாவூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத்தலங்கள் :
உதயமார்த்தாண்டபுரம்
பறவையகம்.
முத்துப்பேட்டை
சதுப்பு நில காடுகள்.
தியாகராஜசுவாமி திருக்கோவில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக