இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தாராதேவி கருவுற்றாள், தான்
கருவுற்றதற்கு காரணம் சந்திரன் என தன் கணவரான குருதேவரிடம் கூறினார். பின்
தாராதேவி ஒரு அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள். அந்த குழந்தையை தாராதேவியுடன்
வளர விரும்பாத குருதேவர், சந்திரனை அழைத்து அந்த குழந்தையை சந்திரனிடமே
ஒப்படைத்தார். குழந்தையை பெற்றுக்கொண்ட சந்திரனும், தன் 27 தேவிமார்களையும்
அழைத்து, அந்த குழந்தையை தன் குழந்தை போல் வளர்க்கச் சொல்கிறார். பின்பு, அந்த
குழந்தைக்கு புதன் என பெயர் சூட்டினார்.
தேவிமார்களிடம் பாகுபாடு :
சந்திரன் கூறிய வார்த்தைகளை மதித்து 27
தேவிமார்களில் கார்த்திகை, ரோகிணி தேவிமார்கள் மட்டும் புதனை நன்றாக அன்புடன்
வளர்த்தார்கள். இதில் கார்த்திகையை விட ரோகிணியே அதிக பாசத்துடன் புதனை
வளர்த்தார்.
அதனால் சந்திரன் அந்த இரண்டு தேவிமார்களிடம்
மட்டும் அதிக அன்பையும், நேரத்தையும் செலவிட்டார்.
மற்ற தேவிமார்களை சந்திரன் அலட்சியம் செய்தார்.
இதனால் கோபம் அடைந்த 25 தேவிமார்கள் தன் தந்தையான தட்ச பிரஜாபதியிடம் சென்று இங்கு
நடந்தவற்றை கூறி, சந்திரன் தங்களுடன் அன்புடனும், நேசத்துடனும் நடந்து கொள்ளச்
சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தட்ச பிரஜாபதியிடம் சந்திரன் சாபம் பெறல் :
தன் மகள்கள் கூறியதைக்கேட்டு தட்ச பிரஜாபதி
கோபம் கொண்டு, சந்திரனை அழைத்து நடந்தவற்றை எதையும் கேட்காமல், தன் மகள்கள்
கூறியதை கேட்டு சந்திரனுக்கு சாபமிட்டார்.
தன் மகள்களை கவரக் காரணமாக இருந்த கலைகள்,
அதாவது சந்திரனின் அழகு பதினைந்து நாட்களில் தேய்ந்து போகும் படி சாபமிடுகிறார்.
சந்திரன் பல வரங்கள் பெற்றவராயினும், பல ஆயிரம்
ஆண்டுகள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்கள் மற்றும் அரிய சக்திகளை
பெற்றவர் தட்ச பிரஜாபதி. எனவே அவரின் சாபத்தை தடுத்து நிறுத்தும் சக்தி தனக்கில்லை
என்பதை உணர்ந்தார் சந்திரன்.
சிவபெருமான் சாப விமோசனம் அளித்தல் :
கயிலாயத்திற்கு சென்ற சந்திரன் நடந்த அனைத்து
நிகழ்வுகளையும் சிவபெருமானிடம் கூறினார். எதிரிக்கும் அருளும், விருப்பு வெறுப்பு
இல்லாத சிவபெருமானும் சந்திரன் மீதுள்ள உண்மையை அறிந்து அவருக்கு சாப விமோசனம்
அளித்தார்.
சந்திரன் தன்னை எதிர்த்து போர் செய்தாலும்,
சந்திரனின் பிறப்பின் ரகசியம் அறிந்த சிவபெருமான் சந்திரனின் மீதி இருந்த ஒரு
கலையை தன் முடியில் சூட்டிக் கொண்டார்.
சிவபெருமான் கட்டிக் கொண்ட அந்த ஒரு கலை மட்டும்
என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் என கூறுகிறார்.
என்னுடைய அருளால் பதினைந்து நாட்களில் வளர்ந்து
பூரண சந்திரனாகவும், தட்ச பிரஜாபதியின் சாபத்தால் அடுத்த பதினைந்து நாட்களில்
தேய்ந்து, இந்த ஒரு கலை அழியாமல் மீண்டும் வளர்வதும் தேய்வதுமாக இருப்பாய் என
சிவபெருமான் அருள் புரிந்தார்.
மேலும், நீ மனோதைரியத்துடன் என்னுடன் தயங்காமல்
போர் புரிந்தாய். அதனால் மனித இனத்தின் மனோநிலையைக் கட்டுபடுத்துபவனாகவும்
இருப்பாய் என்று அருள் புரிந்தார்.
உன்னால் பல இன்னல்களுக்கு ஆளாகி பின், உன் தவறை
மன்னித்து ஏற்றுக்கொண்ட காரணத்தால் குருதேவருக்கு உன்னுடைய வீடான கடக ராசி,
அவருக்கு உச்ச வீடாக இருக்கும்.
தட்ச பிரஜாபதியின் மகள்களான 27 தேவிமார்களும்,
12 ராசிகளில் நின்று, அவர்களுடன் பரிபாலனம் செய்து வருவாய்.
உன்னுடைய வீடான கடக ராசி புண்ணிய ராசியாகவும்,
அந்த ராசியில் பிறந்தவர்கள் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.
சந்திர பகவான் தரும் தோஷங்கள் :
சந்திரன் உடல், மனம் மற்றும் தாய் காரகன். எனவே
சந்திரன் மறைவு ஸ்தானங்களில் நின்றாலோ அல்லது நீசம் பெற்றாலோ உடல் வலிமை மற்றும்
மனோ வலிமை இருக்காது.
சந்திரன் சனியுடன் இணைந்தால் சந்நியாசி
யோகத்தையும், பொருளாதார இன்னல்களையும் அளிப்பார்.
சந்திரன் மற்றும் செவ்வாய் இணைவு விபத்தை
ஏற்படுத்தும்.
சந்திரன் மற்றும் சர்பங்களின் இணைவு மனோ தைரியம்
மற்றும் அறிவுக்கூர்மையைக் கெடுக்கும்.
சந்திரனுக்கு உரிய பரிகாரங்கள் :
சந்திரனுக்கு பலம் உள்ள பௌர்ணமி அன்று, இரவில்
நடைபெறும் பௌர்ணமி பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடுவதால் சந்திரனின் அருள்
கிடைக்கும்.
திங்களூரில் உள்ள சிவபெருமானை
வழிபடுவதன் மூலம் சந்திரனால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக